மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

ஏற்றுமதியில் சாதிக்கும் சிறு நிறுவனங்கள்!

ஏற்றுமதியில் சாதிக்கும் சிறு நிறுவனங்கள்!

2017-18 நிதியாண்டில் இந்தியாவின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி மதிப்பு 1,47,390 மில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது.

பொது வர்த்தகப் புலனாய்வு மற்றும் புள்ளியியல் இயக்குநரகத்திடமிருந்து கிடைத்த விவரங்களைக் கொண்டு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி தொடர்பான தகவல்களை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சரான கிரிராஜ் சிங் மக்களவையில் வெளியிட்டுள்ளார். அதன்படி, 1,47,390.08 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இந்தியாவின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 2017-18 நிதியாண்டில் ஏற்றுமதி செய்துள்ளன.

இதற்கு முன்னர், 2016-17 நிதியாண்டில் 1,37,068.80 மில்லியன் டாலர், 2015-16 நிதியாண்டில் 1,30,768.70 மில்லியன் டாலர், 2014-15 நிதியாண்டில் 1,38,896.72 மில்லியன் டாலர், 2013-14 நிதியாண்டில் 1,33,3313.28 மில்லியன் டாலர், 2012-13 நிதியாண்டில் 1,27,992.76 மில்லியன் டாலர் என்ற அளவில் ஏற்றுமதி நடைபெற்றிருந்தது. இத்துறையின் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கு அரசு தரப்பிலிருந்து பல்வேறு சலுகைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக கிரிராஜ் சிங் தெரிவித்தார்.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon