மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

தம்பிதுரை கருத்து அதிமுகவின் கருத்தல்ல!

தம்பிதுரை கருத்து அதிமுகவின் கருத்தல்ல!வெற்றிநடை போடும் தமிழகம்

தம்பிதுரையின் கருத்துகள் எல்லாம் அதிமுகவின் கருத்துகள் இல்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் தொழில் வர்த்தகக் கண்காட்சியின் நிறைவு விழா நேற்று (பிப்ரவரி 10) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொழில்முனைவோருக்கு சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களிடம் அதிமுக பெற்றுள்ள செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக மு.க.ஸ்டாலின் கூறும் கருத்துகளுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேவையில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பின்பும் அதிமுக அரசுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

அரசியலில் கூட்டணி என்பது சூழ்நிலை மாற்றத்துக்கேற்ப முடிவெடுக்கப்படும். முந்தைய தேர்தலில் ஜெயலலிதா கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட்டாலும், தற்போது கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. கூட்டணி அமைப்பது குறித்து கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு அதிமுக தொண்டர்கள் கட்டுப்படுவார்கள். தம்பிதுரை ஒரு மூத்த தலைவர் என்பதால் அவரது அனுபவத்தின் அடிப்படையில் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். கூட்டணி குறித்த அவரது கருத்துகள் அவரது தனிப்பட்ட கருத்துகளாகும். அது ஒட்டுமொத்த கட்சியின் கருத்து இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 10 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon