மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

26 ஆயிரம் கோடிக்கும் மேல் டாஸ்மாக் வருமானம்!

26 ஆயிரம் கோடிக்கும் மேல் டாஸ்மாக் வருமானம்!

டாஸ்மாக் கடைகள் மூலம் 2017-18ஆம் ஆண்டில் தமிழக அரசுக்கு 26,797.96 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகத் தமிழ்நாடு வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 5,000 டாஸ்மாக் கடைகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. மற்ற துறைகளில் கிடைக்கும் வருமானத்தை விட டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கும் வருமானமே அதிகம். சாதாரண நாட்களில் 70 கோடி ரூபாய் வருமானமும், பண்டிகை நாட்களில் 100 கோடி ரூபாய் வருமானமும் இதற்குக் கிடைக்கும்.

இந்நிலையில், 2017-18ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் வருவாய் அறிக்கை இன்று (பிப்ரவரி 11) வெளியிடப்பட்டது. தமிழ்நாடு வாணிபக் கழகம் தாக்கல் செய்துள்ள 35ஆவது ஆண்டறிக்கையில், டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ.26,797.96 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்ததையடுத்து, முதற்கட்டமாக 3,000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடைக்கு 2 சிசிடிவி கேமராக்கள் வீதம் 6,000 கேமராக்களை பொருத்த ரூ.5 கோடி மதிப்பிலான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon