மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

பூமராங்: கூட்டணியை விடாத அதர்வா

பூமராங்: கூட்டணியை விடாத அதர்வா

அதர்வா நடிக்கும் புதிய படத்தின் பணிகள் நேற்று (பிப்ரவரி 10) சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இவன் தந்திரன்’ படத்தைத் தொடர்ந்து ஆர்.கண்ணன் தனது ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனம் சார்பில் இயக்கி தயாரித்துள்ள படம் ‘பூமராங்’. அதர்வா, மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள இப்படம் மார்ச் 1ஆம் தேதி உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து ஆர்.கண்ணன் தனது அடுத்த படத்தின் பணிகளைத் துவங்கியுள்ளார். அந்தப் படத்திலும் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தையும் ஆர்.கண்ணன் தனது ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். எம்.கே. ராம்பிரசாத்தின் ‘எம்கேஆர்பி புரொடக்‌ஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்தப் பூஜையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சமுத்திரக்கனி, ஸ்டன்ட் மாஸ்டராக பணிபுரியும் ‘ ஸ்டன்ட்’ சில்வா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. விரைவில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் வெளியாக உள்ளது.

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon