மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

பெருகும் மொபைல் உற்பத்தி ஆலைகள்!

பெருகும் மொபைல் உற்பத்தி ஆலைகள்!

இந்தியாவில் இயங்கும் மொபைல் உற்பத்தி ஆலைகளின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.

அதிகரித்து வரும் இணையச் சேவை மற்றும் பல்வேறு சிறப்புச் சலுகைகளால் இந்தியாவில் மொபைல் போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மொபைல் போன்கள் உற்பத்தியும் அரசு தரப்பிலிருந்து ஊக்கமளிக்கப்பட்டு வருவதால் மொபைல் தயாரிப்பு ஆலைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ஃபிளெக்ஸ்ட்ரானிக்ஸ் டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பெர்டெக் எக்ஸ்போர்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் மொபைல் உற்பத்தி ஆலைகள் அமைக்க அரசிடம் ஒப்புதல் பெற்றன. இதன் மூலம் இந்தியாவில் மொபைல் தயாரிப்பு ஆலைகளின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.

மின்னணு சாதனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையிடமிருந்து கிடைத்த தகவல்களின்படி, மொபைல் போன்கள் உற்பத்திச் செயல்பாடுகளுக்கு குறிப்பிடத்தகுந்த வரிகள் விதிக்கப்படுகின்றன. மொபைல் தயாரிப்புத் துறைக்கு 100 சதவிகித அந்நிய நேரடி முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்படுவதோடு, மொபைல் போன்கள் ஏற்றுமதிக்கு 4 சதவிகித ஊக்கத்தொகையும் அரசு தரப்பிலிருந்து வழங்கப்படுகிறது. இலவச வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் எல்.சி.டி. மற்றும் எல்.இ.டி. டிவிகள் அதிகமாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுவதாகவும் மின்னணு சாதனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-18ஆம் ஆண்டில் மட்டும் சீனாவிலிருந்து இவ்வாறாக மொத்தம் 3.68 லட்சம் டிவிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மேலும், 2018 ஏப்ரல் - அக்டோபரில் மொத்தம் 7.58 லட்சம் டிவிகள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன.

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon