மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

விரைவில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்!

விரைவில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்!

ஜாக்டோ ஜியோ போராட்டத்தைப் பொறுத்தவரை சட்டப்பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்துதான் எனது கருத்து என்று தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று (பிப்ரவரி 11) பள்ளிக்கல்வித் துறை சார்பில் பதினோராம், பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து வினாக்களுக்கான மதிப்பெண் மற்றும் மதிப்பெண்கள் வழங்கப்படும் முறைகள் குறித்து மாணவர்களிடையே தெளிவு ஏற்படுத்துவதற்காக மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அனைத்துப் பாட பிரிவுகளுக்கும் மாதிரி வினா விடைக் குறிப்புகள் புத்தக வடிவிலும், குறுந்தகடு வடிவிலும் வெளியிடப்பட்டுள்ளன. http://www.tnscert.org இணையதளத்திலும் மாதிரி வினா-விடைக் குறிப்புகளைப் பதிவிறக்கம் செய்யும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், “பொதுத்தேர்வில் எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படுகிறது என்பதை அறிவதற்கு ஏதுவாக மாதிரி வினா-விடைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு 500 தேர்வு மையங்கள் ஏற்படுத்திய நிலையில் இந்த ஆண்டு 742 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. 10 கிலோமீட்டர் தொலைவிற்குள்ளாகத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நிதி நெருக்கடியால் பொதுத் தேர்வின்போது அனைத்துப் பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தாமதமாகின. எல்லா இடங்களிலும் விரைந்து கேமரா பொருத்தப்படும். மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்வதற்காக 413 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 16,000 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். பொதுத் தேர்வுக்குப் பின் 9 கல்லூரிகளில் 25 நாட்கள் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவடைந்தவுடன், தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon