மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 11 பிப் 2019

விபத்து: தீப்பிடித்த இருசக்கர வாகனங்கள்!

விபத்து: தீப்பிடித்த இருசக்கர வாகனங்கள்!

காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்த விவகாரத்தில், பந்தயத்தில் ஈடுபடும்விதமாக வாகனத்தில் மாற்றம் செய்யப்பட்டதே காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த சேந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் ஹரிகரன். நேற்று முன்தினம் (பிப்ரவரி 9) இரவு உறவினர்கள் இருவருடன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். புல்லேரி கிராமத்தை அடைந்தபோது, அவரது இருசக்கர வாகனம் மீது எதிர்த் திசையில் அதிவேகத்தில் வந்த ஒரு பைக் மோதியது. இதில் இரண்டு வாகனங்களும் உடனடியாகத் தீப்பிடித்தன. இந்த சம்பவத்தில் ஹரிகரன், பிரேம்குமார் இருவருமே விபத்தில் உயிரிழந்தனர்.

ஹரிகரன் வாகனத்தில் மோதிய நபரின் பெயர் பிரேம்குமார் என்றும், அவர் மலாலிநத்தம் எனும் ஊரைச் சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் இருசக்கர வாகனம் தீப்பிடித்ததன் காரணங்களை விசாரணை செய்தனர் போலீசார்.

அப்போது, போட்டியில் கலந்துகொள்ளும் விதமாக இருசக்கர வாகனத்தின் சைலன்சர், டேங்க் ஆகியன மாற்றப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக, வாகனத்தில் மோதிய வேகத்தில் டேங்கில் கசிவு ஏற்பட்டு சைலன்சர் வெப்பம் காரணமாக இருசக்கர வாகனம் தீப்பிடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

திங்கள் 11 பிப் 2019