மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 22 அக் 2020

திருப்பூர்ல இருந்து தில்லி வரைக்குமா: அப்டேட் குமாரு

திருப்பூர்ல இருந்து தில்லி வரைக்குமா: அப்டேட் குமாரு

ஹேஸ்டேக் போட்டே தமிழ்நாட்டுக்காரங்க டயர்டு ஆகிடுவாங்க போல. ட்விட்டர், ஃபேஸ்புக் எல்லாம் ஏதோ அடை மழை அடிச்சு ஓஞ்ச மாதிரி இருக்கு. இப்ப இந்த பக்கம் சுத்திக்கிட்டு இருக்குறவங்களும் காமராஜர்ன்னா யாரு தெரியுமான்னு கேட்டு மறுபடியும் ஆரம்பிச்சுகிட்டு இருக்காங்க. இவங்க கருப்பு பலூன் காட்டி, ஹேஸ் டேக் போட்ட எஃபெக்ட், திருப்பூர்ல இருந்து தில்லி வரைக்கும் போய் கட்சி மாறி தம்பி துரையையும் பிடிச்சுருச்சு போல. காலையில பாராளுமன்றத்துல பேசுனது அவர் தானான்னு திரும்ப திரும்ப பார்த்துகிட்டு இருக்காங்க. அப்டேட்டை பாருங்க. நானும் ஒரு தடவை கன்ஃபார்ம் பண்ணிட்டு வந்துடுறேன்.

@Suyanalavaathi

21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை சந்திக்க தயார் - ஆர்.பி.உதயகுமார் #

ஆனா தேர்தல் மட்டும் நடத்த மாட்டிங்க.. அதான !!

@itz_azha

நமக்கு பிடிச்ச மாதிரி வாழ்க்கை என்னிக்காவது ஒரு நாள் மாறும் என்ற ஆசைய விட,

ஒரே நாள்ல மாறனும் அப்படிங்கிற பேராசை தான் எல்லாருக்கும்.!!

@ItsJokker

ஆலோசனைக்கும், அறிவுரைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

இதெல்லாம் செஞ்சா வெற்றி கிடைக்கும்ன்னு சொன்னா அது "ஆலோசனை"

இதெல்லாம் செஞ்சா தோல்வி கிடைக்கும் னு சொன்னா அது "அறிவுரை"

@nandhu_twitts

காரணமே தெரியாத கவலைகள்தான் உயிரின் ஆணி வேரை அறுத்து கொண்டிருக்கிறது..!!

@Anandh_Offl

பகல் கொள்ளை யாதெனில் ஒரு ரூபாய் பிரின்டவுட்டுக்கு பத்துரூபாய் நெட் சார்ஜ் வாங்குவது.

@Annaiinpillai

உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் தமிழகம் முதலிடம் - அமைச்சர் விஜயபாஸ்கர்# இதெல்லாம் பெருமையா.. கடமை சாரே?!

@manipmp

இன்டர்வியூவில் எல்லா கேள்வியும் கேட்டுட்டு வேலை இல்லைனு சொல்வதைபோலத் தான்..

ஏடிஎம்மில் எல்லா கேள்வியும் கேட்டுட்டு பணம் இல்லைனு சொல்வது

@amuduarattai

"பேங்க் பேலன்ஸ்" என்பது, பணகாரர்களுக்கு டெபாசிட்டையும், ஏழைகளுக்கு கடனையும் குறிக்கும்.

@i_akaran

அனைவருக்கும் நண்பராக இருப்பது என்பது உண்மையில் ஒருவருக்கும் நண்பராக இல்லாததை போன்றது.,

- அரிஸ்டாட்டில்

@amuduarattai

இந்தியாவில் காமராஜர் ஆட்சியை கொடுப்போம்!- மோடி

ஆட்சியை கொடுப்பது இருக்கட்டும். முதலில் காமராஜர் யாருன்னு தெரியுமா.!?

@Thaadikkaran

பழகிருச்சு என்று சொல்லும் அந்த ஒற்றை வார்த்தையில் ஆயிரமாயிரம் வலிகள் மறைக்கப்பட்டிருக்கும்..!!

@amuduarattai

"இந்த பாலை பொங்காமல் பார்த்துக்கங்க" என்று மனைவி சொல்வதின் பின்னே, கணவரை திட்டுவதற்கான சதித்திட்டமும் இருக்கலாம்.

@mohanramko

பேரம் பேசி, பொருளோட விலையை குறைச்சி, பெருமையா வீட்டுக்கு போய் சொன்னா, 'இதை சும்மா கொடுத்தா கூட யாரும் வாங்கமாட்டாங்க, உங்களை நல்லா ஏமாத்திட்டாங்க' னு சொல்ற மனைவி.... இன்னொரு மேனேஜரா கண்ணுக்கு தெரியறாங்க...

@parveenyunus

திமுக, அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என கமல்ஹாசன் கூறிய பிறகு கூட்டணியில் சேர வேண்டும் என கே.எஸ்.அழகிரி கூறியது ஏன் என்று தெரியவில்லை?- முத்தரசன் #

அழகிரின்னாலே திமுகவுக்கு பிரச்னை தான் போல.

@RahimGazzali

தேர்தல் நெருக்கத்தில் நிகழ்ந்த இயற்கை பேரிடர்களில் சிக்கிய மக்களை அரசு ஒருபோதும் கைவிடுவது இல்லை.

@19SIVA25

எந்தக் கட்சியையும் மிரட்டி கூட்டணி வைக்க முடியாது - இல.கணேசன்

மைக்க ஈபிஎஸ் கிட்ட கொடுங்க !! கேட்போம்

@Kannan_Twitz

சில பிரச்சனைகளை பேசிதான் தீர்க்கனும்... ஆனா பேச மாட்டோம்!

சில பிரச்சனைகளை பேசாமத்தான் தீர்க்கனும்... ஆனா பேசி பேசியே அந்த பிரச்சனைய தீர விடாமாட்டோம்!

இதான் நம்ம பெரிய பிரச்சனையே.

@HAJAMYDEENNKS

தில்லுக்கு துட்டு படத்தில் சந்தானம் பேயை காமெடியாக டீல் பண்ணுவதை போல தமிழகத்தில் மோடியை டீல் பண்ணி அனுப்பி விடுகிறார்கள் மக்கள் !

@RahimGazzali

மத்திய அரசு விவசாயிகளுக்கு தற்போது அறிவித்த சலுகையை ஏன் 2018 ஆம் ஆண்டில் அறிவிக்கவில்லை!- தம்பிதுரை

கஜா புயல் பாதிப்புக்காக இப்போது 2000 ரூபாய் அறிவித்திருக்கும் எடப்பாடிக்கும் இது பொருந்துமா?

-லாக் ஆஃப்

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon