மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

அந்நிய நேரடி முதலீடுகள் சரிவு!

அந்நிய நேரடி முதலீடுகள் சரிவு!வெற்றிநடை போடும் தமிழகம்

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத சரிவை இந்தியா பதிவுசெய்துள்ளது.

2017ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் இந்தியாவில் மொத்தம் 25.34 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், 2018ஆம் ஆண்டின் ஏப்ரல் - செப்டம்பரில் இந்த மதிப்பு 22.66 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பீட்டில் முதலீடுகள் ரூ.1.63 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.55 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. இதற்கு முன்னர் கடைசியாக 2012-13 நிதியாண்டில் 12.84 பில்லியன் டாலரிலிருந்து 2013-14 நிதியாண்டில் 11.37 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.

இந்திய மாநிலங்களிலேயே அதிகபட்சமாக டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தில் 5.65 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 5.32 பில்லியன் டாலரும், குஜராத்தில் 1.55 பில்லியன் டாலரும் ஏப்ரல் - செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த விவரங்களை மத்திய தொழில் துறைக் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ளது. முன்னதாக சென்ற மாதம் குஜராத்தில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் உலகின் மிக விரும்பத்தக்க முதலீட்டு மையமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon