மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஜூலை 2020

தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்க!

தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்க!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என்ற பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதம் செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவிற்கு எதிராகத் தமிழக அரசும், தமிழக அரசுக்கு எதிராக வேதாந்தா நிறுவனமும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் இது தொடர்பான விசாரணையின்போது, இருதரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து விட்டன. வேறு எந்த தகவலையாவது தெரிவிக்க விரும்பினால் அனைத்து தரப்பும் வரும் 11ஆம் தேதிக்குள் தங்களின் எழுத்துப்பூர்வ வாதங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கூறியது.

இந்நிலையில், இன்று (பிப்ரவரி 11) உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமான வாதங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்துள்ளது. அதில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதே தூத்துக்குடி மக்களின் விருப்பம் என்றும் எழுத்துப்பூர்வமான வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon