மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 13 ஆக 2020

கள்ளச் சாராயத்தால் 116 பேர் பலி: சிறப்புப் புலனாய்வு!

கள்ளச் சாராயத்தால் 116 பேர் பலி: சிறப்புப் புலனாய்வு!

உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தராகண்டில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டத்திலுள்ள பாலுப்பூர் ரூர்கி பகுதியில் கடந்த வாரம் கள்ளச்சாராய விற்பனை நடந்தது. கடந்த 8ஆம் தேதி நள்ளிரவு அப்பகுதியில் நிகழ்ந்த துக்க நிகழ்ச்சி ஒன்றில் கள்ளச்சாராயம் வழங்கப்பட்டது. இதனைக் குடித்த பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதில் 12 பேர் பலியானதாக முதல்கட்டத் தகவல் வெளியானது. இந்நிலையில் தொடர்ந்து பலரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால், தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளச் சாராயம் குடித்தவர்கள் சகாரன்பூர், பாலுப்பூர் உள்ளிட்ட மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை உத்தரப் பிரதேச அரசு நியமித்துள்ளது. இதுவரை 31 சாராய வியாபாரிகள் உள்பட 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லிட்டருக்கும் அதிகமான கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று(பிப்ரவரி 10) இந்த விவகாரம் தொடர்பாகப் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

இதற்கு பாஜகதான் காரணம் என காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இது குறித்து விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், கள்ளச் சாராயம் தயாரிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார்.

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon