மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

பன்னீர் தகுதி நீக்க வழக்கு: இந்த வாரத்தில் விசாரணை!

பன்னீர் தகுதி நீக்க வழக்கு: இந்த வாரத்தில் விசாரணை!

துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு இந்த வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ததுபோலவே, நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வருக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென திமுக மற்றும் தினகரன் தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு நீதிபதி ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன், அப்துல் நசீர் தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணையில் இருந்துவருகிறது.

இவ்வழக்கு கடந்த ஜனவரி 31ஆம் தேதி இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் இதுதொடர்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். வேறொரு வழக்கை விசாரிக்க இருப்பதால் அடுத்த வாரத்தில் தகுதி நீக்க வழக்கை விசாரிப்பதாக நீதிபதிகள் உறுதியளித்தனர். கடந்த 7ஆம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை விசாரணைக்கு வரவில்லை.

இந்த நிலையில் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டுமென திமுக தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் இன்று (பிப்ரவரி 11) முறையிடப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதிபதி சிக்ரி, வழக்கை இவ்வாரத்திலேயே விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon