மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 11 பிப் 2019

பட்டாசுத் தடை: சிவகாசியில் 3 நாள் போராட்டம்!

பட்டாசுத் தடை: சிவகாசியில் 3 நாள் போராட்டம்!

உச்ச நீதிமன்றம் பட்டாசுத் தயாரிப்பில் பல கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளர்கள் சார்பில் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள போராட்டம் இன்று தொடங்கியது.

பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான வழக்கில், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். பேரியம் நைட்ரேட் வேதிப்பொருள் கலக்காத பசுமைப் பட்டாசைத் தயாரிக்க வேண்டுமென்பது அவற்றில் ஒன்று. இந்த உத்தரவுப்படி பட்டாசுகளைத் தயாரிக்க முடியாது என்றும், பசுமைப் பட்டாசு கிடையாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர் பட்டாசு உரிமையாளர்கள். இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று கோரி, கடந்த நவம்பர் 13ஆம் தேதி முதல் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சுமார் 1,070க்கும் மேற்பட்ட ஆலைகள் மூடப்பட்டன. அதனைச் சார்ந்திருந்த சுமார் 9 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் என்று பல்வேறு தரப்பினர் சார்பில் இதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன. வேலைவாய்ப்பை முன்னிட்டுப் பட்டாசு ஆலைத் தொழிலாளர்களும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால், இதுவரை மாநில அரசோ, மத்திய அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இன்று முதல் மூன்று நாட்களுக்குத் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று பட்டாசுத் தொழிலாளர்கள் பாதுகாப்புக் குழு சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 11) காலையில் சிவகாசி திருத்தங்களில் உள்ள சோனி மைதானத்தில் பட்டாசு ஆலைத் தொழிலாளர்கள் ஒன்று திரண்டனர். இன்று காத்திருப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மாலை வரை தொடரும் இப்போராட்டத்தில் ஆலைத் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு நிறுவனப் பணியாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

நாளை நடைபெறவுள்ள போராட்டம் குறித்து, இன்று மாலையில் முடிவெடுக்கப்படும் என்று போராட்டக் குழுவினர் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

திங்கள் 11 பிப் 2019