மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

இருசக்கர வாகன ஏற்றுமதி உயர்வு!

இருசக்கர வாகன ஏற்றுமதி உயர்வு!

நடப்பு நிதியாண்டின் முதல் பத்து மாதங்களில் இந்தியாவின் இருசக்கர வாகன ஏற்றுமதி 19.49 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

இருசக்கர வாகன விற்பனை மற்றும் ஏற்றுமதி குறித்த விவரங்களை இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2018-19 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாதங்களில் மொத்தம் 27,59,935 இருசக்கர வாகனங்களை இந்தியா ஏற்றுமதி செய்திருக்கிறது. இது 2017-18 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட 23,09,805 வாகனங்களை விட 19.49 சதவிகிதம் கூடுதலாகும். மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள் பிரிவில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக ஒட்டுமொத்த ஏற்றுமதி சிறப்பான வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் ஏற்றுமதி எண்ணிக்கை 20,34,250லிருந்து 24,12,800 ஆக உயர்ந்துள்ளது. இது 18.61 சதவிகித வளர்ச்சியாகும். அதேபோல ஸ்கூட்டர்கள் ஏற்றுமதி 2,62,253லிருந்து 3,32,197 ஆக உயர்ந்துள்ளது. மொபெட் வகை வாகனங்கள் ஏற்றுமதியிலும் 12.3 சதவிகிதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இருசக்கர வாகனங்கள் இந்தியாவிலிருந்து அதிகமான அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களிலேயே அதிகபட்சமாக, பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மொத்தம் 14,50,766 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. சென்னையைச் சேர்ந்த டி.வி.எஸ். நிறுவனம் 5,04,799 வாகனங்களை ஏப்ரல் - ஜனவரியில் ஏற்றுமதி செய்திருக்கிறது.

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon