மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 11 பிப் 2019

வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய்: முதல்வர்

வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய்: முதல்வர்

வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் உதவித் தொகையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 8ஆம் தேதி தொடங்கிய நிலையில், அன்றைய தினம் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்து, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார், அதனைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது. இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று (பிப்ரவரி 11) அவை மீண்டும் கூடியது.

அப்போது 110 விதியின் கீழ் அறிக்கை வாசித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “பல மாவட்டங்களில் ‘கஜா’ புயலின் தாக்கத்தினாலும், பருவமழை பொய்த்ததன் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும்” என்று அறிவித்தார்.

“இதனால், கிராமப்புரத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும், ஆக மொத்தம் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவியைப் பெறுவர்” என்று தெரிவித்த முதல்வர், இதற்கென, 1,200 கோடி ரூபாய் 2018-19 துணை மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து கடந்த 9ஆம் தேதி ஓ.பன்னீர் பட்ஜெட்: எடப்பாடி போட்ட சென்சார்! என்ற தலைப்பில் வெளியான செய்தியில், பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கும் அம்சங்களை கண்காணித்த முதல்வர், சில திட்ட அறிவிப்புகள் குறித்த பகுதிகளை பட்ஜெட்டில் இருந்து நீக்கச் சொல்லிவிட்டதாகவும், இதனை பிறகு அறிவித்துக் கொள்ளலாம் என்று அட்வைஸ் செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தோம். மேலும், தேர்தல் நேரத்து சலுகைகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டால் அதற்கான பெயரில் ஒரு பகுதி ஓ.பன்னீர்செல்வத்துக்குப் போய்விடும். இதை உணர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த புதிய அறிவிப்புகள், திட்டங்களை எல்லாம் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தானே அறிவிக்கத் திட்டமிட்டிருக்கிறார் என்றும் கூறியிருந்தோம்.

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்! ...

6 நிமிட வாசிப்பு

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் ...

6 நிமிட வாசிப்பு

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் குரல்கள்!

திங்கள் 11 பிப் 2019