மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 10 பிப் 2019

மோடி வந்தார் பின்னே, ஹேஷ்டேக் வந்தது முன்னே :அப்டேட் குமாரு

மோடி வந்தார் பின்னே, ஹேஷ்டேக் வந்தது முன்னே :அப்டேட் குமாரு

ஃபிரெண்டு ஒருத்தர் ஃபோன் போட்டு, ‘பையன் குரூப் ஸ்டடின்னு ஃபிரெண்ட் ரூமுக்குப் போனான். ஆனால், ஃபேஸ்புக்ல ஆன்லைன்லயே இருக்குறதா காட்டுது’ என்ன பண்றான்னு கொஞ்சம் வாட்ச் பண்ணுங்கன்னு கேட்டாப்ல. சரின்னு ரூமுக்கு போய் பாத்தா, அஞ்சு பசங்க ஒண்ணா உக்காந்து ட்விட்டர்ல கோ பேக் மோடின்னு ட்வீட் போட்டு வெள்ளாண்ட்ருக்கானுங்க. விவேகானந்தர் கேட்ட 5 பேரை கண்டுபுடுச்சிட்டோம்னு சந்தோசமா வீட்டுக்கு வந்தா, திருப்பூர் கறுப்புக் கொடி போராட்டத்துல செருப்பு வீசுன பா.ஜ.க பெண் நிர்வாகியை அத்தனை பேர் சேர்ந்து அடிச்ச வீடியோவை வாட்ஸப்ல அனுப்புறாங்க. உலகம் முழுக்கவும் உக்காந்து மோடிக்கு எதிர்ப்பு காட்டி பேர் சம்பாதிச்சா, தமிழ்நாட்டுக்குன்னு இப்படி பத்து பேர் சேர்ந்து மானத்தை வாங்குறதுக்கு இருக்காங்கன்னு புலம்பிட்ருக்காங்க. இதைக்கூட கவனிக்காம, கட்சி ஆஃபீஸ்ல இருந்து அனுப்புன மேட்டரையெல்லாம் ஒன்னொன்னா ஹேஷ்டேக்ல போட்டுட்டு இருக்காங்க. இவங்கள வெச்சிக்கிட்டு எந்த நம்பிக்கைல தமிழ்நாட்டை இந்தளவுக்கு பா.ஜ.க தலைமை நம்புதுன்னு தெர்ல.

ரஹீம் கஸ்ஸாலி

யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அதிமுகவில் கூட்டணி அமையும்!- எம்.பி வைத்திலிங்கம்

ஒருவேளை தினகரனோடு வைப்பாங்களோ?

அஜ்மல் அரசை

நாட்டில் மோடிஜி செயல்படுத்தாத திட்டங்களே இல்லை.-பா.ஜ.க-வினர்

எங்கேடா உருப்படியா ஒரு ஐந்து திட்டங்களை சொல்லுங்கடா கேட்போம்.?-மக்கள்

அது வந்து அது வந்து எல்லா இடத்துலயும் அடிக்கல் நாட்டியிருப்போம் போய் பார்த்துக்கங்க-பா.ஜ.க-வினர்

உள்ளூராட்டக்காரன்

டிரஸ் எடுக்கும் போது, உடன் கூட்டிட்டு போன நண்பன் கொஞ்ச நேரம் எடுக்குற டிரஸ்க்கு எல்லாம் ஆர்வமா கமெண்ட் சொல்லிக்கிட்டு இருந்தான்.

ஒரு கட்டத்துக்கு மேல, எந்த டிரஸ் எடுத்து காட்டினாலும் ஒரே வார்த்தைல சூப்பர்னு சொல்ல தொடங்கிட்டான்.

பாவம்... அவன் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்குல்ல?!

amudu

பெண்களின் சமையலில் நுட்பமாக குறைகள் காணும் ஆண்களுக்கு, எதுவும் சமைக்கத் தெரியாது என்பது முரண்.

இரா.சரவணன்

திருப்பூருக்கு மோடி, நெல்லைக்கு யோகி, ஈரோட்டுக்கு அமித்ஷா, சென்னைக்கு கட்கரி, ராமேஷ்வரத்துக்கு அமித்ஷா என தமிழகத்துக்கு படையெடுக்கிறார்கள் பாஜக தலைவர்கள். கஜா பாதிப்பின் போது ஆறுதலுக்காக வராதவர்கள் தேர்தலுக்காக வருகிறார்கள். தமிழர்கள் திருப்பி அடிக்க வேண்டிய நேரமிது.

#GoBackModi

எனக்கொரு டவுட்டு ⁉

தமிழகத்தில் பா.ஜ.க.வை வரவிட மாட்டோம்' - தம்பிதுரை# அப்படி சொல்ல அவருக்கு அதிமுகவில் உரிமை கொடுத்தது யாருன்னு அக்கா வருவாங்கன்னு நினைக்கேன்..!!

கோழியின் கிறுக்கல்!!

நாலு ரவுண்டு போன பிறகு சொல்வதெல்லாம் உண்மையாக தான் இருக்கும்!!

மெத்த வீட்டான்

உலக அளவில் சொந்த நாட்டு மக்களால் இவ்வளவு எதிர்ப்புகளை சமிபத்தில் எந்த ஒரு நாட்டின் பிரதமரோ அதிபரோ சந்தித்து இருக்க மாட்டார்கள்...!

கோழியின் கிறுக்கல்!!

உங்களை தனிமையில் அழ வைக்கும் வாய்ப்பு இருக்கும் நபரிடம் இருந்து, தனித்து போகாதீர்கள்!!!

Sudha

I just installed Twitter to say #GoBackModi

Mad Men

ஒரு ஆணுக்கு பல பெண் தோழிகள் இருக்கிறார்கள் என்றால் அவன் மிகவும் கண்ணியமானவன் என்று அர்த்தம்.

பென்சில்_ட்வீட்ஸ்

ஐந்து வருடங்களில் மோடி அரசு ஒரு ஸ்மார்ட் சிட்டியையும் உருவாக்கி முடிக்கவில்லை

மித்ரன்

மோடி வர்றதை பாஜக காரங்க கூட இவ்ளோ ஆர்வமா எதிர்பார்க்க மாட்டாங்க போல..

வச்சி செய்ய ஸ்பின்னர் ஓவருக்கு வெயிட் பண்ற சேவாக் மாதிரி வெறித்தனமா காத்துருக்காங்க தமிழ்நாட்டு ஆண்டி இந்தியன்ஸ்...?

Ranjith

சிவில் இஞ்சினியரிங் சேர்ந்த 2வது வருசம் ஆட்சிக்கு வந்து அறிவிச்சாப்ள. நாங்களாம் நிறைய வேலைவாய்ப்பு வரும்.கட்டிட துறையில் புதிய உச்சம் தொடும். இந்தியா 2020 க்குள்ளயே வல்லரசு ஆகிடும்னு நம்புனோம். ஆனா இப்ப ரியாலிட்டிய உணர்ந்து #GoBackModi டேக்ல திட்டிகிட்டு இருக்கோம்.

செந்திலின்_கிறுக்கல்கள்

பெண்கள் தன் மீது வைக்கும் பாரத்தை சாதூர்யமாக என் மீது வைத்து விடுகிறார்கள் "வாஷிங்மிஷின்"

Sashi kha

இந்த சாக்லேட் எல்லாம் பிடிக்காதவங்களுக்காக முறுக்கு டே, அதிரச டே ன்னு ஒன்னு வச்சா பரவால்ல

A.Jayankondan

இந்தியாவின் முன்னோடியே "தமிழ்நாடு"தான்!

அது வளர்ச்சியானாலும் சரி!

ஆதிக்க/பாசிச/இந்துத்துவ சித்தாந்த எதிர்ப்பானாலும் சரி!

தமிழ்நாடுதான் முன்னாடி

Zen Selvaa

பாஜக, இந்த முறை தமிழ்நாட்டில் அதிக அளவில் பிரச்சாரம் செய்வதைப் பார்த்தால்,

வட மாநிலங்களில் ஒன்றும் தேறாது என்பதால், தமிழகத்தை குறி வைக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது....!

Hasan Kalifa

மற்ற பிரதமர்களின் பயனங்களால் சாலையில்தான் ட்ராஃபிக் ஜாம் ஆகும்,ஆனால் நம் தற்போதைய பிரதமரின் தொடர்ச்சியான விமான பயனங்களால் அந்த ஆகாயத்திலே ட்ராஃபிக் ஜாம் ஆகுது.

உள்ளூராட்டக்காரன்

அன்பே... பிரம்மன், அவனது 'அப்ரைஸல்' காலகட்டத்தில் தான் உன்னை படைத்திருக்கக்கூடும்..!

Ashok.R

மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று மானமுள்ள மனிதருக்கு அவ்வை சொன்னது, அதில் அர்த்தம் உள்ளது. #GoBackModi

-லாக் ஆஃப்.

ஞாயிறு, 10 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon