மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

மலையாளத்துக்குப் போன குட்டி ஜானு

மலையாளத்துக்குப் போன குட்டி ஜானு

96 படத்தின் மூலம் கவனம் பெற்ற கௌரி கிஷன் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 திரைப்படம் பெரியளவில் வெற்றிபெற்றதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒரு காரணம், இளவயது கதாபாத்திரங்களுக்கான நடிகர், நடிகை தேர்வும் அவர்களது கச்சிதமான நடிப்பும் தான். ஆதித்யா பாஸ்கரும் கௌரி கிஷனும் விஜய்சேதுபதியாக, த்ரிஷாவாக மாறி நடித்திருந்தனர்.

இருவரும் தமிழ்த் திரையுலகில் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில் கௌரி கிஷனை மலையாளத் திரையுலகம் அழைத்துள்ளது.

துஸார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் பிரின்ஸ் ஜாய் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கௌரிக்கு ஜோடியாக சன்னி வேயின் நடிக்கிறார்.‘அனுகிரஹித்தன் அந்தோனி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பில் பிப்ரவரி 7ஆம் தேதி கௌரி கிஷன் இணைந்துள்ளார். இதனைக் கௌரி கிஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இந்தப் படத்தை கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

வெள்ளி, 8 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon