மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

சமூக கோபம் தரும் அழுத்தம்!

 சமூக கோபம் தரும் அழுத்தம்!

விளம்பரம்

சில ஆண்டுகளுக்கு முன்புவரை, தினசரியைத் திறந்தாலே அதிலுள்ள செய்திகள் மனதைக் காயப்படுத்துவதாகப் புலம்பினர் சிலர். தொலைக்காட்சிகளில் செய்திகள் பார்ப்பதைத் தவிர்ப்பதில், இதன் அடுத்தகட்டம் தொடங்கியது. இன்றைய செல்போன் யுகத்தில், அதற்கான வாய்ப்புகள் கூட கிடைப்பதில்லை. இப்போது ஒரு செய்தி என்பது வெவ்வேறு வடிவங்களில் மனிதர்களைச் சென்றடைகிறது. இதனாலேயே ஸ்மார்ட் போன் வாங்காமல் இருப்பவர்களும் நம்மிடையே உண்டு.

செய்திகள் மட்டுமல்ல; தகவல்களும் கூட இந்தப் பணியைச் சிறப்புறச் செய்கின்றன. சமூகத்திற்கு ஒவ்வாத கருத்துகளும் கொள்கைகளும் பரவும் வேகத்தைக் கண்டு, இந்த மனிதர்களின் ரத்தநாளங்கள் முறுக்கேறுகின்றன. வழக்கத்திலுள்ள இயல்பான நடைமுறைகளும் செயல்பாடுகளும், சமூகம் குறித்த பல்வேறு கேள்விகளை நமக்குள் எழுப்புகின்றன. தேவைகள் பூர்த்தியானவர்களுக்கோ, தேவை என்னவென்று அறியாதவர்களுக்கோ, இது ஒரு பிரச்சினையல்ல. ஆனால், இரண்டுக்கும் இடைப்பட்ட நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை எப்போதும் திரிசங்கு சொர்க்கம் தான்.

இல்லாதவற்றை நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டும், இருப்பவற்றின் அருமையை உணராமல் இருந்துகொண்டும், இவர்களது மொத்த வாழ்க்கையும் கழியும். சமூக அவலங்கள் பக்கம் இவர்களது கவனம் திரும்பும்போது, அந்த அழுத்தம் மிக அதிகமாகும். ரயில்களிலும் பேருந்துகளிலும் நடைபாதைகளிலும் இப்படிப்பட்ட மனிதர்களைக் காணலாம். இவர்களில் ஆண், பெண் பேதமில்லை. ஒரு தவறு நடக்கும்போது இவர்களது பார்வையில் வெளிப்படும் சிறு கோபமும், வார்த்தைகளில் தென்படும் கொந்தளிப்பும் இதனை நமக்கும் கடத்தும்.

இந்த மன அழுத்தம் அதிகமாகும்போது தான், தொலைதொடர்புத் துறை சாதனங்களில் இருந்து விலகுதல் தொடங்கும். இப்படிப்பட்ட மனிதர்கள் மனநல சிகிச்சைகளுக்குப் பிறகு, தங்கள் அக்கறையை அதிகமாக்கி, கோபத்தைக் குறைக்கும் வித்தையைக் கற்றுக்கொள்வர். மைண்ட் ஸோன் மருத்துவமனையில்தரப்படும் சிகிச்சைகள், இதுபோன்ற பிரச்சினைகளை எளிதாகத் தீர்க்கின்றன. இதனை மருத்துவ உளவியல் நிபுணர் சுனில் குமார் மற்றும் உளவியல் மருத்துவர் ஜெயசுதா காமராஜ் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.

மைண்ட் ஸோன் மருத்துவமனை

நம்பர் 58/2, முதல் அவென்யூ,

சாஸ்திரி நகர், அடையார்,

சென்னை – 600020

இமெயில்: [email protected]

அலைபேசி: 044-24460101, 9444297058, 9176055660

விளம்பர பகுதி

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon