மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 18 செப் 2020

கல்யாண்ராமனை சந்திக்கும் ராமகோபாலன்

கல்யாண்ராமனை சந்திக்கும் ராமகோபாலன்

இஸ்லாமியர்கள் குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்டு வந்ததாக பாஜகவைச் சேர்ந்த நங்கநல்லூர் கல்யாண் ராமனை கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக காவல்துறையினர் கைது செய்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு பிப்ரவரி 2 அதிகாலை வந்த பாஜகவைச் சேர்ந்த கல்யாண் ராமனை தடுத்தி நிறுத்திய சென்னை மாநகர காவல் துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் கல்யாண்ராமனை சந்திக்க இந்துமுன்னணி தலைவர் ராமகோபாலன் கடலூர் சிறைக்கு செல்வதாக தகவல் கிடைக்க, கடலூரில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கிறார்கள்.

கல்யாண்ராமனை புழல் சிறையில் அடைத்தால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தகவல் கிடைத்ததால், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமலிருக்க கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். கல்யாண்ராமனை சந்திக்க இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் நாளை மறுநாள் பிப்ரவரி 6 ஆம் தேதி கடலூர் வருகிறார். இத்தகவல் கிடைத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் கடலூர் மாவட்ட போலீசார்.

சிறையில் இருக்கும் கல்யாண்ராமனை பாஜகவினர் யாரும் சென்று சந்தித்ததாக இதுவரை தகவல் இல்லை.

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon