மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 18 செப் 2020

பாகிஸ்தானிய பாடகருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்!

பாகிஸ்தானிய பாடகருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்!

பாகிஸ்தானிய பாடகரான ரகத் ஃபத்தே அலி கானுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பல்வேறு பாலிவுட் திரைப்படங்களில் பணிபுரிந்தவர் ரகத் ஃபத்தே அலி கான். இவர் அதிகளவில் வெளிநாட்டு பணத்தை கொண்டுவந்ததற்காக 2011ஆம் ஆண்டில் டெல்லி விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரும், அவருடன் தொடர்புடைய இருவரும் 1.24 லட்சம் அமெரிக்க டாலரை கொண்டுவந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். அந்நிய செலாவணி மேலாண்மை சட்ட விதிகளின் படி ஒரு வெளிநாட்டவர் 5,000 டாலருக்கு மேற்பட்ட தொகையையோ, 5,000 டாலருக்கு மேல் மதிப்பு கொண்ட காசோலை போன்ற பொருட்களையோ கொண்டுவர முடியாது.

ஆகையால், இவ்வழக்கில் ரகத் ஃபத்தே அலி கான் தரப்பு விளக்கத்தை பதிவு செய்வதற்காக 2015ஆம் ஆண்டில் அவருக்கு அமலாக்கத் துறை அழைப்பு விடுத்தது. தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும், குழுவாக பயணித்ததால் கையில் நிறைய பணம் வைத்திருந்ததாகவும் ரகத் ஃபத்தே அலி கான் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக விளக்கமளிக்கும்படி அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் ரகத் ஃபத்தே அலி கானுக்கு அமலாக்கத்துறையினர் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும், 45 நாட்களுக்குள் பதிலளிக்கும்படி அவரிடம் அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

புதன், 30 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon