மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜன 2019

டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சொத்துப் பட்டியல் - அமித் ஷா ஆபரேஷன்!

டிஜிட்டல் திண்ணை:  அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சொத்துப் பட்டியல் - அமித் ஷா ஆபரேஷன்!

மொபைல் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

“தமிழகத்தில் அதிமுகவை கூட்டணிக்குக் கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது பாஜக. ஆனால் அதிமுகவோ இன்னும் எந்த பதிலையும் சொல்லாமல் நழுவிக் கொண்டே இருக்கிறது. ஜனவரி முதல் வாரத்தில் சென்னையில் நடந்த ஆர்எஸ்எஸ் கூட்டத்துக்கு அழைக்கப்பட்ட அமித் ஷாவிடம் ஆர் எஸ் எஸ் நிர்வாகிகள், தமிழக கூட்டணி பற்றி கேட்டபோது அது தன் பொறுப்பு என்று அமித் ஷா உத்திரவாதம் கொடுத்திருந்தார். ஆனால் இன்னமும் அதுபற்றி ஒரு முடிவு கிடைக்காத நிலையில்தான், கடைசி கட்டமாக கர்நாடகத்தில் தான் செயல்படுத்திய ஆபரேஷனை இப்போது கையிலெடுத்திருக்கிறார் அமித் ஷா.

கடந்த ஆண்டு நடந்த கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்ட, ஒன்றிய காங்கிரஸ்காரர்களின் சொத்து மதிப்பு ஐந்து ஆண்டுகளுக்கு முன் என்ன, கடந்த ஐந்தாண்டு காங்கிரஸ் ஆட்சிக்குப் பின் சொத்து மதிப்பு என்ன என்பது பற்றிய தெளிவான விவரங்கள் சேகரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட, ஒன்றிய வாட்ஸ் அப் க்ரூப்புகளுக்கு அனுப்பப்பட்டது. “மிகப் பெரிய தலைவர்களைதான் விமர்சிக்க வேண்டும் என்பது இல்லை. உன் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் காங்கிரஸ்காரர் எப்படிப்பட்டவர் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும்” என்பதுதான் அமித் ஷாவின் உத்தரவு. கடற்கரையோர கர்நாடகாவில் பாஜகவுக்குக் கிடைத்த வெற்றி அமித் ஷாவின் இந்த ஆபரேஷனால் வந்ததுதான்.

அதைத்தான் தமிழகத்திலும்செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறார் அமித் ஷா. அதன்படி தமிழகத்தில் சீக்ரெட் ஆபரேஷனை தொடங்கியிருக்கிறது மத்திய அரசு. தமிழகத்தில் உள்ள அதிமுக எம்.பிக்கள், அமைச்சர்கள், எம்.எல். ஏக்கள் அவர்கள் பெயரில் வாங்கிய சொத்துக்கள், குடும்பத்தினர் பெயரில் வாங்கிய சொத்துக்கள், உறவினர்கள் பெயரில் வாங்கிய சொத்துக்கள், பினாமி பெயரில் வாங்கிய சொத்துக்கள் என அத்தனையும் கணக்கெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த ஆபரேஷனை ஐ.பி மூலமாகவே பாஜக அரசு தொடங்கியிருக்கிறது. தமிழகம் முழுக்கவே ஐ.பியை சேர்ந்தவர்கள் விசாரணையை தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக பத்திரப்பதிவு அலுவலகங்களில், கடந்த 5 ஆண்டுகளில் யாரெல்லாம் புதிதாக சொத்து வாங்கினார்கள்... அதில் அந்த பகுதி அதிமுகவினர் வாங்கிய சொத்துக்கள் எது? அதில் அமைச்சர், எம்பி, எம்.எல்.ஏக்கள் பின்னணியில் வாங்கிய சொத்துக்கள் எவை? பினாமி பெயரில் வாங்கியது என்றால், அவரது விபரம் என மொத்தமும் சேகரிக்க ஆரம்பித்திருக்கிறது ஐ.பி.

இந்த சொத்து விபரங்கள் மொத்தமும் கைக்கு வந்த பிறகுதான் பாஜகவின் அரசியல் ஆட்டம் ஆரம்பமாகும் என்கிறார்கள். ஒருவேளை அதிமுக கூட்டணிக்கு ஒத்து வராத பட்சத்தில் சொத்து பட்டியலை கையில் வைத்துக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதுதான் பிஜேபியின் திட்டம் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். குறிப்பாக, சேலம், தேனி, மதுரை மாவட்டங்களில்தான் இந்த விசாரனை ரொம்பவே தீவிரமாக நடக்கிறது. எடப்பாடி சம்பந்தப்பட்ட எதுவும் விடுபட்டுப் போய்விடக் கூடாது என்றும் டெல்லியில் இருந்தே உத்தரவு வந்திருக்கிறதாம். அதனால் தோண்டித் துருவி விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள்” என்று முடிந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் பதிவிட்டது ஃபேஸ்புக். “அதிமுகவா.. திமுகவா என பாமக தீவிர டிஸ்கஷனில் இருப்பதை நாம் ஏற்கெனவே டிஜிட்டல் திண்ணையில் எழுதி இருக்கிறோம். ராமதாஸைப் பொறுத்தவரை அதிமுகவுடன் போய்விடலாம் என சொல்லவே ஆரம்பித்துவிட்டாராம். ஆனால், அன்புமணியோ, ‘அதிமுகவுடன் நாம போனால் அது தற்கொலைக்கு சமம்தான். நமக்கு எதிர்கால அரசியலே இல்லாமல் போய்டும். அகில இந்திய அளவுல அடுத்து பிஜேபி வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே தெரியுது. அதுல போய் நாம எம்.பியாகி என்ன வந்துடப் போகுது. திமுக கூட்டணிக்குப் போனால், அங்கே காங்கிரஸ் இருக்கும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் உட்காரும் போது, அமைச்சரவையில் நமக்கு இடம் கிடைக்கும்..’ என்று சொல்லியிருக்கிறார். ஸ்டாலினிடம் இதை ஏற்கெனவே துரைமுருகன் உள்ளிட்ட சிலர் சொன்னபோது, அவரிடம் இருந்து பெரிய ரியாக்‌ஷன் எதுவும் வரவில்லை. ஆனாலும் விடாமல் பாமக தரப்பில் இருந்து திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை திமுகவில் ஓகே ஆனாலும் பாமக கேட்பது கிடைக்குமா என்பது சந்தேகமே” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.

“பாமக என்ன கேட்டது?” என்று கமெண்டில் கேட்டது வாட்ஸ் அப்.

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

வெள்ளி 25 ஜன 2019