மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 14 ஜன 2019

பாலியல் தொல்லை: ஷீ பாக்ஸில் புகாரளிக்கும் பெண்கள்!

பாலியல் தொல்லை:  ஷீ பாக்ஸில் புகாரளிக்கும் பெண்கள்!

2017ஆம் ஆண்டில் தனியார் நிறுவனங்களில் நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து 167 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கின்ற பாலியல் தொல்லைகளுக்கு புகாரளிக்க ஷீ-பாக்ஸ் (SHe-Box) என்ற வலைதளம் உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இந்த வலைதளத்தில் 2017ஆம் ஆண்டில் மட்டும் 169 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 33 புகார்களும், டெல்லியில் 23 புகார்களும் பதிவாகியிருந்தன.

கடந்த ஆண்டில் மத்திய அமைச்சகங்களில் 141 பாலியல் புகார்கள் பதிவாகியுள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சகத்தால் இதில் 45 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக நிதி அமைச்சகத்தில் 21 புகார்களும், தொலைத்தொடர்பு மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களில் 16 புகார்களும் பதிவாகியுள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் தளத்தின் வழியாகப் பதிவு செய்யப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட மத்திய மற்றும் மாநில துறைகளுக்கு அனுப்பப்படுகிறது.

இந்தத் தளத்தில் அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள், 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 653 மாவட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 14 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon