மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஜன 2019

ஹாரி பாட்டர் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் நாய்!

ஹாரி பாட்டர் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் நாய்!

ஜே.கே.ரௌலிங்கின் ஹாரி பாட்டர் புத்தகங்களுக்கும், அதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படங்களுக்கும் உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. அதில் மிகவும் வெறித்தனமான ரசிகர் ஒருவர் தனது செல்ல வளர்ப்பு நாயையும் ஹாரி பாட்டர் ரசிகராக மாற்றியுள்ளார். இப்போது அந்த நாய் ஹாரி பாட்டர் படத்தில் வரும் மந்திரங்களுக்கு ஏற்ப அசைவுகளையும், சைகைகளையும் செய்து வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி, தற்போது அந்த நாயும் பிரபலமாகியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த நடிகரும், யூடியூப் பிரபலமுமான ஆன்னா பிரிஸ்பின் என்பவர் தனது செல்ல வளர்ப்பு நாய் ரெமுஸின் வீடியோவை யூடியூப்பில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஹாரி பாட்டர் மந்திரங்களுக்கு ஏற்ப நாய் சைகை செய்து பதிலளிக்கிறது. ‘விங்கர்டிய லெவியோசா’ என்ற மந்திரத்தைச் சொன்னால் காற்றில் மிதப்பது போல சைகை செய்வதும், ‘அவடா கெடவ்ரா’ என்ற மந்திரத்தைச் சொன்னால் இறந்தது போல நடிப்பதுமாக, ஹாரி பாட்டர் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்ற நெட்டிசன்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்த நாய்.

பிரபலமான ஹாரி பாட்டர் மந்திரங்கள் மட்டுமல்லாமல், தெளிவற்ற மந்திரங்களைக்கூட ரெமுஸ் புரிந்து கொள்கிறது. ட்விட்டர்வாசிகளும் இந்த நாயின் சைகைகளை ரசித்துக் கருத்துகளை வெளியிட்டுப் பகிர்ந்து வருகின்றனர். ஆன்னா பிரிஸ்பின் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீங்கள் உங்களது நாயை ஜெர்மன் மொழியில் பயிற்றுவித்திருக்கலாம். நான் எனது நாயை ஹாரி பாட்டர் மந்திரங்களுக்குப் பயிற்சி அளித்துள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ரெமுஸ் நாய்க்குட்டியின் வீடியோ...

சனி, 12 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon