மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 26 மே 2020

நளினி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

நளினி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட சாரதா நிதி நிறுவனம் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.30 ஆயிரம் கோடி வரை பணம் வசூலித்துத் திருப்பி கொடுக்க முடியாமல் சிபிஐ விசாரணையைச் சந்தித்து வருகின்றது. இந்த மோசடி தொடர்பாக இதன் நிறுவனர் சுதீப்தா சென் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே ஜி.என்.என்.பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனமும் இணைந்து பாசிட்டிவ் என்ற ஒரு டிவி சேனலை வாங்குவது தொடர்பாக கடந்த 2010ல் ஒப்பந்தம் செய்தன.

ரூ.42 கோடி செலவில் தொலைக்காட்சி சேனல் வாங்கும் விவகாரத்தில் சாரதா குழுமத்துக்குச் சட்ட உதவிகள் வழங்கியதற்காக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும், மூத்த வழக்கறிஞருமான நளினி சிதம்பரத்துக்கு ரூ.1.4 கோடி கட்டணம் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறையும், சிபிஐயும் வழக்குப்பதிவு செய்து நளினி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தின.

இந்நிலையில் நேற்று (ஜனவரி 11) நளினி சிதம்பரம் மீது கொல்கத்தா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆறாவது குற்றப் பத்திரிகையாகும். உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ வசம் 2014ஆம் ஆண்டில் ஒப்படைத்தது என்பது நினைவுகூரத்தக்கது.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon