மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஜன 2019

கீர்த்தி எனும் தென்னிந்திய குயின்!

கீர்த்தி எனும் தென்னிந்திய குயின்!

தென்னிந்தியத் திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடிப்பது, பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பது என முன்னணி நடிகையாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். கடந்த ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் தமிழ், தெலுங்கு திரையுலகில் ஏழு படங்கள் வெளியாகின.

தமிழில் அவர் நடிக்கும் அடுத்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளிவருவதற்குள் மலையாளம், தெலுங்கில் பரபரப்பாக இயங்கிவருகிறார். கீர்த்தி சுரேஷ் தற்போது வரலாற்றுக்கதையாக உருவாகும் ‘மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார் . மோகன்லால், அர்ஜுன், பிரபு எனப் பலர் நடிக்கும் இந்தப் படம், மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் நடிக்கும் மலையாளப் படமாகும்.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் அடுத்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கீர்த்தி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் எடுக்கப்படும் இந்தப் படம், தெலுங்கில் உருவாகிறது. ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மகேஷ் எஸ் கோனெரு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, நரேந்திரநாத் என்ற அறிமுக இயக்குநர் இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை, ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதன் பெரும்பாலானக் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளன.

சனி, 12 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon