மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 19 செப் 2020

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: சீனாவின் ஆத்மார்த்தமான அன்பு!

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: சீனாவின் ஆத்மார்த்தமான அன்பு!

விளம்பரம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை வணிக நிர்வாகி திரு. சிவ ராமச்சந்திரன் “மீண்டும் Golden City Gate விருது வென்றது பெருமை அளிப்பதுடன், எங்களது முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றுகூறியதற்குக் காரணம் இருக்கிறது. கடந்த வருடம் நடைபெற்ற Golden City Gate விருது நிகழ்ச்சியில் “Epic Journey of Sri Lanka on SriLankan Airlines” என்கிற அவர்களது விளம்பரப் படத்துக்கு விருது வழங்கப்பட்டிருந்தது. இப்படியொரு அனுபவத்தைஏற்கனவே அனுபவித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு, இவ்வருடம் மூன்று விருதுகள் வழங்கப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சியையும் அதீத உந்து சக்தியையும் கொடுத்திருக்கிறது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் Golden City Gate விருது நிகழ்வில் மூன்றாவதாக வென்றது “The Spirit of China, the Story of Sri Lanka” என்ற விளம்பரப் படத்துக்காக.

விமானப் பயணத்தை அதிகம் விரும்பும் சீனர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தைக் கொடுக்கும் எண்ணத்தில் சீனாவுக்குச் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களின் சேவைகளில் பல யுக்திகளைக் கையாள்கிறது இந்நிறுவனம். அதன்ஒட்டுமொத்த அனுபவத் தொகுப்பே “The Spirit of China, the Story of Sri Lanka”.

சீன மக்களுக்குப் புரியும் விதத்தில் தங்களது விளம்பரப் படத்தை உருவாக்கியிருந்தது அதன் சிறப்புகளில் ஒன்று. சீன மொழியின் மூலமாக அல்லாமல், சீனக் கலை வடிவத்தை, அதன் ஆத்மாவுடன் இணைத்துக் கொண்டுபோய்ச் சேர்த்ததேஇதன் வெற்றி. சீனக் கலை வடிவம் உருவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. மாறாக, அந்தத் தோற்றத்தின் ஆத்மார்த்தமான பகிர்வுக்கு அதிக இடம் கொடுக்கிறது. ஸ்ரீலங்காவில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களை, இந்தக் கலை வடிவத்தில் உருவாக்கி, சீன மக்கள் பார்த்ததும் புரிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு இந்த விளம்பரப் படம் உருவாக்கப்பட்டிருந்தது.

ஸ்ரீலங்காவின் கலாச்சாரம், நிலப்பரப்பு, காண வேண்டிய இடங்கள், ரசிக்க வேண்டிய கலைகள், ருசிக்க வேண்டிய உணவுகள், இன்புற வேண்டிய இடங்கள் என அனைத்தையும் இந்த விளம்பரப் படம் முன்னிறுத்தியது. இவ்வளவுமுக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இந்த விளம்பரப் படம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சீன விமான சேவை முயற்சியையும் வெற்றிபெற வைத்திருக்கிறது.

ஒரு வாரத்துக்கு 20 விமானங்கள் என சீனாவின் முக்கிய நகரங்களான ஷாங்காய், பீஜிங், குவாங்சோ, ஹாங்காங் ஆகிய பகுதிகளுக்கு விமான சேவையைத் தடையின்றி வழங்கிவருகிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்.

விளம்பர பகுதி

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon