மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 3 ஆக 2020

புத்தகங்களை ஃபுட் கோட்ல கொண்டாடுறாங்க: அப்டேட் குமாரு

புத்தகங்களை ஃபுட் கோட்ல கொண்டாடுறாங்க: அப்டேட் குமாரு

‘நான் இன்னைக்கு வாங்குன புத்தகம்’னு ஆளுக்கு நாலு புத்தகத்தை போட்டோ எடுத்து ஃபேஸ்புக்ல போடுறது தான் இப்போ டிரெண்ட். சரி நம்மளும் புக் ஃபேர் போய் ஒரு செல்ஃபி எடுத்து போட்டா தான் மதிப்பாங்கன்னு போய் பார்த்தேன். அடேயப்பா சும்மா சொல்லக் கூடாது கூட்டம் அடிச்சு தள்ளுது. நானும் வரிசையில போய் நின்னு பார்த்தேன். அதுக்கு அப்புறம் தான் தெரியுது, எல்லாம் காளிபிளவருக்கும், குழாய் புட்டுக்கும் டோக்கனுக்கு நிற்குறாங்க. அடேய் புக் ஃபேர் எந்த பக்கம் நடக்குதுன்னு கேட்டா அந்த பக்கம் ஒரு கூடாரத்தை கையை காட்டுறாங்க. சே.. என்ன மாதிரியான சமூகத்துல நாம வாழ்றோம்..

வெளியே நின்ன கூட்டத்துல பாதி தான் உள்ள இருந்தது. ஒவ்வொரு கடைக்காரங்களும் எதிர்த்த கடைக்காரங்க முகத்தை பார்த்துகிட்டு இருக்காங்க. எங்க தேடியும் சேக்கிழார் எழுதுன கம்பராமாயணம் மட்டும் கிடைக்கல. கஷ்டப்பட்டு கொண்டு போன லிஸ்ட்டுல உள்ள புக்கை எல்லாம் தூக்கி ஒரு செல்பி எடுத்துட்டு வச்சிருந்த காசுக்கு டெல்லி அப்பளம் வாங்கி சாப்பிட்டு வந்தேன். சரி இந்த செல்பிக்கு ஒரு கேப்ஷன் சொல்லுங்களேன்.. என்ன உர்ருன்னு பார்கீங்க.. போங்க அப்டேட்டை பாருங்க.

@Kozhiyaar

பக்கத்து இலைக்கு பாயாசம் போலத்தான், மகளுக்கு தாய் வாங்கும் நகை நட்டும்!!!

@ShivaP_Offl

ஒரு தகப்பனை பணக்காரன் ஆகாமல் பக்குவமாக பார்த்துக்கொள்கிறது தனியார் பள்ளியின் மேனேஜ்மென்ட்...

@shivaas_twitz

பொங்கலுக்கு அரசாங்கம் ஒரு நாள் எக்ஸ்ட்ரா லீவு விட்டுருக்கு,

ரெண்டு பெரிய நடிகர்களோட படம் ரிலீஸ் ஆகியிருக்கு,

அந்த படங்களை பார்க்க ரேஷன் கடைல 1000 ரூபாய் கொடுக்குறாங்க...

இதுக்கு மேல ஒரு தமிழனுக்கு என்ன வேணும்..?

@parveenyunus

வாஜ்பாய் பாணியில் கூட்டணி ஆட்சி – மோடி #

அப்ப..புதிய இந்தியா பொறக்கும்னு சொன்னதெல்லாம் பொய்யா கோபால்..?

@Annaiinpillai

மக்களுக்கான திட்டங்கள் என்னிடம் மட்டுமே உள்ளது - தினகரன் # அனைவருக்கும் அல்வா கொடுக்குற திட்டம் தானே அது?!

@Thaadikkaran

வெளிய எங்க போலாம்னு முடிவு பண்ணுவதைவிட, வெளிய போலாமா வேணாமான்னு முடிவு பண்ணுவதே சிரமமாய் இருக்கும் பலருக்கு..!!

@sultan_Twitz

தமிழகத்தில் பழைய நண்பர்களுடனும் கூட்டணி அமைக்க தயார்! - பிரதமர் மோடி #

இன்னொரு கிட்னியை எடுக்கத்தான் வா வாங்குறாரு உஷாரு..?

@rahimgazali

பொங்கலுக்கு ஐந்து நாட்களுக்கு முன்னால் படத்தை ரிலீஸ் செய்துவிட்டு பொங்கல் ரிலீஸ் என்பதெல்லாம் வேறு லெவல். அநேகமா பொங்கல் வரும்போது இந்த படங்களுக்கு வெற்றிவிழா கொண்டாடப்பட்டு பழைய படங்களாகியிருக்கும்.

@ajmalnks

அனைத்து கார்டுக்கும் பொங்கல் பரிசு 1000 ரூபாய்க்கு ஹைகோர்ட் அனுமதி ! - செய்தி

சர்க்கரைப் பொங்கல் சமத்துவ பொங்கலானது.

@maninilas

பேட்ட படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் என்னை உசுப்பேற்றி, உசுப்பேற்றி நடிக்க வைத்தார்கள்- ரஜினிகாந்த்

ஒவ்வொரு படத்தின் ரிலீஸின் போதும் அரசியலுக்கு வர்றேன் ன்னு ரசிகர்களை நீங்க உசுப்பேத்தற மாதிரி தானே

@rahimgazali

தமிழ்நாட்டு மக்களுக்கு யார் துரோகம் செய்கிறார்களோ அவர்களை மத்தியில் ஆட்சிக்கு வர விட மாட்டோம்!- எடப்பாடி

இப்படித்தான் ஈயம் பூசுன மாதிரியும், பூசாத மாதிரியும் பேசணும்.

@ajmalnks

மக்களுக்கான திட்டங்கள் என்னிடம் மட்டுமே உள்ளது - தினகரன்

ஏகப்பட்ட டோக்கன் கையிருப்புல இருக்குன்னு சொல்ல வர்றாரு.

@azam_twitz

பஸ்ஸில் சைடு சீட்டில் உட்காரும்போது வரும் பாரு மொரட்டு தூக்கம் கீழே விழாமல் இருப்பதற்கு அதுலேயே கத்துக்கலாம் நம்முடைய தற்காப்பு கலை!!!

@Annaiinpillai

ஸ்டாலின் நிர்வாகிகளை கட்டாயப்படுத்தி கூட்டம் நடத்துகிறார் - ஓ.எஸ்.மணியன்.#

உங்கள கட்டாயப்படுத்தி தமிழகத்தில ஆட்சியே நடக்குது

@ItsJokker

ஆன்லைனில் இருக்கும்போது அனுப்பிய மெசேஜ்,

ப்ளூ டிக் ஆக எடுத்துக்கொள்ளும் நேரம் சொல்லி விடுகிறது நமது முக்கியத்துவம் எவ்வளவு என்று..!!!

@Suyanalavaathi

“பண மதிப்பிழப்பால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது” - ஆய்வறிக்கை #

பாணி பூரி கடை கூட அதிகரிக்கவில்லையா ஜி !!

@vickytalkz

எத்தனை வருசம் கழிச்சு வந்தாலும் ட்விட்டர விட்ட எடத்துல இருந்தே ஆரம்பிக்கலாம். அதே டாப்பிக்கதான் வேற வேற மாடுலேஷன்ல பேசிட்டு இருப்பாங்க அவ்ளோதான்

@Annaiinpillai

கணவன்மார்கள் பாக்கெட்டில் இருந்து அவர்களுக்கே தெரியாமல் காசு எடுக்குற மனைவிமார்களின் கைவண்ணம் தான் உலகின் தலை சிறந்த மேஜிக் மொமென்ட்!

@drkvm

சிறு வணிகத்தை பாதுகாக்க ஜி.எஸ்.டி.யில் சலுகை..அருண் ஜெட்லி..

செத்த கிளிக்கு எதுக்கு தங்கத்தில கூண்டு...

@HAJAMYDEENNKS

திராவிடம் என்ன செய்தது ?

நாடாளுமன்றத்தில் மற்ற கட்சிகள் எல்லாம் வாய்மூடி இருந்தபோது பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எதிர்த்து கர்ஜித்தது !

@ItsJokker

மறையாத பாட்டி வைத்தியங்களில் இதுவும் ஒன்று.

"கல்யாணம் முடிச்சிட்டா, எல்லாம் சரியாய் போயிரும்"

@Annaiinpillai

புதிதாக வேலைக்கு சென்ற ஆபிஸ் நிலவரங்கள் ஆரம்பத்தில் எதுவும் புரியாத மணிரத்னம் படம் பார்ப்பது போல தான் இருக்கும்!

@rahimgazali

விஜய் படம் வெளிவரும்போது 'நான் தல ஃபேன். ஆனாலும் தளபதி கலக்கிட்டாரு'ன்னும், அஜீத் படம் வரும்போது 'நான் தளபதி ஃபேன். ஆனாலும் தல கலக்கிட்டாரு'ன்னும் மைக் முன்னாடி சொல்வதுக்கு யாராவது இரண்டு பேர் மீடியாவுக்கு கிடைச்சிடுறாங்க.

@GreeseDabba

நான் மும்பையை பார்ப்பேன் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை.-மோடி

365 நாளும் பாரின் டூர்லயே இருந்தா, அப்புறம் எப்படி நினைச்சு பார்க்க முடியும்..?

@rahimgazali

20 தொகுதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் நிற்கும் படை எவராயினும் எதிர்கொள்ள அதிமுக தயார்.

உள்ளாட்சி தேர்தலும் நடத்தப்பட உள்ளது!- ஓ.பி.எஸ்.

இதைச்சொல்லும்போது காலு ஏன் வெடவெடன்னு நடுங்குது?

@HAJAMYDEENNKS

நம்மாளுங்க சினிமாவுலதான் லாஜிக் பார்ப்பாங்க..சிக்னலில் எல்லாம் நோ ரூல்ஸ் நோ லாஜிக்தான் !

-லாக் ஆஃப்

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon