மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

அதிகரிக்கும் வங்கிக் கடன்கள்!

அதிகரிக்கும் வங்கிக் கடன்கள்!

வங்கிகளின் டெபாசிட் - கடன் விகிதம் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

டெபாசிட் - கடன் விகிதம் என்பது வங்கிகளில் செலுத்தப்படும் டெபாசிட் தொகையிலிருந்து அவ்வங்கிகள் வழங்கும் கடன்களின் அளவாகும். டிசம்பர் மாதத்தில் வங்கிகளின் டெபாசிட் - கடன் விகிதம் 78.6 சதவிகிதமாக அதிகரித்துவிட்டதாக ஜே.எம். ஃபினான்சியல் நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது. இதற்கு முன்னர் 1971ஆம் ஆண்டில்தான் வங்கிகளின் டெபாசிட் - கடன் விகிதம் மிக அதிகமாக 79.3 சதவிகிதமாக இருந்தது. 47 ஆண்டுகளுக்குப் பிறகு 2018 டிசம்பரில் இந்த விகிதம் அதிகரித்திருக்கிறது. ரிசர்வ் வங்கியிடமிருந்து கிடைத்த விவரங்களின்படி, இந்திய வங்கிகளின் கடன்கள் 2018 டிசம்பரில் 15.1 சதவிகிதம் அதிகரித்துள்ள நிலையில், டெபாசிட்கள் வெறும் 9.2 சதவிகிதம் மட்டுமே உயர்ந்துள்ளன.

நடப்பு நிதியாண்டில் வங்கிகள் வழங்கிய கடன் தொகையில் (ரூ.6.3 லட்சம் கோடி) செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான நான்கு மாதங்களில் மட்டும் ரூ.4.8 லட்சம் கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. பத்திரச் சந்தையிலிருந்து கடன் சந்தைக்குப் போதிய அளவிலான நிதி கிடைக்காத காரணத்தால்தான் இவ்வாறாக வங்கிக் கடன்களுக்கும் டெபாசிட்களுக்கும் இடையிலான வித்தியாசம் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. அக்டோபர் மாதத்தில் வங்கிக் கடன்கள் குறைந்திருந்ததாகவும், அது மீண்டும் நவம்பர் மாதத்தில் உயர்ந்துவிட்டதாகவும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது. சில்லறைக் கடன்கள் வீட்டுக் கடன் மற்றும் தனிநபர் கடன்கள் நவம்பர் மாதத்தில் அதிகரித்திருந்ததாகவும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கூறுகிறது.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon