மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜன 2019

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: துபாயில் ராகுல்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: துபாயில் ராகுல்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப் பயணமாக துபாய் சென்றுள்ளார். அங்கு அவர் அந்நாட்டு அமைச்சர்களையும், இந்திய வம்சாவளியினரையும், மாணவர்களையும் சந்தித்து பேசினார்

இன்று காலை துபாயில் நடைபெற்ற இந்திய வர்த்தக மற்றும் தொழில்சார் கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் பின்னர் அங்குள்ள ஜபேல் அலி தொழிலாளர் காலனியில் இந்திய சமூகத்தினர் மற்றும் மாணவர்களை சந்தித்து உரையாடினார்.

”இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து துபாயில் வேலை செய்து வருகிறீர்கள். அதன்மூலம் இந்தியாவிற்கு பெரும் உதவி செய்து வருகிறீர்கள். எனவே உங்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் இங்கு உயர்ந்த கட்டடங்களும், விமான நிலையங்களும் ஏற்பட்டிருக்காது” என்று குறிப்பிட்ட ராகுல், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து துபாய் கிரிக்கெட் மைதானத்தில் மாலை 7.45 மணியளவில் நடைபெறும் இந்தியா - அரபிக் கலாச்சார நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராகுல் கலந்து கொள்ளவுள்ளார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

வெள்ளி 11 ஜன 2019