மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

ஃபேஸ்புக் ஊழியரை கைவசமாக்கிய ஆப்பிள்!

ஃபேஸ்புக் ஊழியரை கைவசமாக்கிய ஆப்பிள்!

ஃபேஸ்புக் நிறுவனத்தைச் சர்ச்சையில் சிக்கவைத்த முன்னாள் ஊழியரை ஆப்பிள் நிறுவனம் பணியமர்த்தியுள்ளது.

2011ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை ஃபேஸ்புக் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளராக சேண்டி பரகிலாஸ் என்பவர் பணிபுரிந்தார். அவர் பொறுப்பு வகித்த காலத்தில் ஃபேஸ்புக் பயனர்களின் தனிநபர் விவரங்களைப் பாதுகாப்பதில் ஃபேஸ்புக் நிர்வாகம் காட்டிய அலட்சியம் குறித்து அவர் தொடர்ந்து பொதுவெளியில் விமர்சித்து வருகிறார். கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா சர்ச்சையில் ஃபேஸ்புக் நிறுவனம் சிக்கியபோதும், அவர் ஃபேஸ்புக் நிர்வாகத்தை விமர்சித்தார். இந்நிலையில், சேண்டி பரகிலாஸை ஆப்பிள் நிறுவனம் பணியமர்த்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆப்பிளின் எதிர்காலத் தயாரிப்புகளில் தகவல் சேகரிப்பைக் குறைப்பதும், தனிநபர் விவரங்களைப் பாதுகாப்பதுமே இவரது பணியாக இருக்கும்.

கடந்த ஆண்டு முதல் சான்பிரான்சிஸ்கோவில் இயங்கி வரும் ஹியூமன் டெக்னாலஜி நிறுவனத்தில் இவர் தலைமை மூலோபாய அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். தகவல் பகிர்வு சர்ச்சையில் ஃபேஸ்புக் சிக்கியபோது இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் டிஜிட்டல், கலாச்சார, ஊடக மற்றும் விளையாட்டுத் துறைக் குழுவிடம் சேண்டி பரகிலாஸ் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தார். ஃபேஸ்புக், கூகுள் போன்ற போட்டியாளர்களைச் சமாளிப்பதற்காக ஆப்பிள் நிறுவனம் தனது தகவல் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாகத்தான் சேண்டியும் பணியமர்த்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon