மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜன 2019

காங் + ஜனதா தளம்: தொடங்கியது கூட்டணிக் கணக்கு!

காங் + ஜனதா தளம்: தொடங்கியது கூட்டணிக் கணக்கு!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளன.

கர்நாடகாவில் கடந்த ஆண்டு மே மாதத்தில் நடந்த சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டிருந்தாலும் தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைத்து ஜனதா தளத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில் இரு கட்சிகளும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளன. அதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

அண்மையில் நடந்த 5 மாநிலச் சட்ட மன்றத் தேர்தலில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதும், கருத்துக் கணிப்புகள் சில காங்கிரஸுக்கு ஆதரவாக இருப்பதும் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அதனால் வரும் மக்களவைத் தேர்தலில் ஜனதா தளம் கட்சிக்கு மிகவும் அதிகப்படியான இடங்களை அளிக்கவும் காங்கிரஸ் தயக்கம் காட்டுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த தலைவர் ஒருவர் டி.என்.என். ஊடகத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் அளித்துள்ள தகவல்களின்படி காங்கிரஸ் கட்சி இரண்டு விதமான இடப் பங்கீட்டை ஜனதா தளத்துக்கு வழங்க முடிவெடுத்துள்ளது தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 24 இடங்களில் போட்டியிட விரும்புகிறது. இதற்கு ஜனதா தளம் சம்மதிக்கும் பட்சத்தில் ஜனதா தளத்துக்கு 4 இடங்கள் கிடைக்கும். கூடுதலான இடங்களை ஜனதா தளம் கேட்கும் பட்சத்தில் காங்கிரஸ் போட்டியிடும் இடங்களை 22 ஆகக் குறைத்துக்கொண்டு, ஜனதா தளத்துக்கு 6 இடங்களை வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்! ...

6 நிமிட வாசிப்பு

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் ...

6 நிமிட வாசிப்பு

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் குரல்கள்!

வெள்ளி 11 ஜன 2019