மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 3 ஆக 2020

மின்னணு வேளாண் சந்தையில் புதிய வசதி!

மின்னணு வேளாண் சந்தையில் புதிய வசதி!

அரசின் மின்னணு வேளாண் சந்தையில் இரு மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகர்கள் ஆன்லைன் மின்னணு முறையில் பணம் செலுத்தும் வசதி செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

வேளாண் பொருட்கள் விற்பனையில் இடைத்தரகு முறையை ஒழித்து விவசாயிகளுக்குச் சிறந்த சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித்தரும் முனைப்பில் இ-நாம் (இணையவழி தேசிய வேளாண் சந்தை) மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச்சந்தையின் கீழ் மொத்தம் 585 வேளாண் சந்தைக் குழுக்கள் இணைக்கப்பட்டுள்ளன. 2020 மார்ச் மாதத்துக்குள் இன்னும் 415 சந்தைகளை இத்திட்டத்துடன் இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. இ-நாம் சந்தையின் மூலம் விவசாயப் பொருட்களை ஆன்லைனில் வாங்கவோ, விற்கவோ முடியும்.

இ-நாம் திட்டத்தில் புதிய மைல்கல்லாக மாநிலங்களுக்கு இடையே உள்ள சந்தைகள் இணையவழி மூலம் பணம் செலுத்தும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வேளாண் உற்பத்திச் சந்தைக் குழுக்களுக்கு இடையே அல்லது ஒரே மாநிலத்தைச் சேர்ந்த இரு வேளாண் சந்தைக் குழுக்களுக்குள் மட்டுமே வர்த்தகம் நடைபெற்று வந்தது. தற்போது முதன்முறையாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் பரேலி இ-நாம் வேளாண் உற்பத்திச் சந்தைக் குழுவின் வர்த்தகரும், உத்தராகண்ட் ஹல்துவானி இ-நாம் வேளாண் உற்பத்திச் சந்தைக் குழுவின் விவசாயியும் தக்காளி வியாபாரத்தை மேற்கொண்டனர்.

அதேபோல, உத்தராகண்ட் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கு இடையே இ-நாம் சந்தை மூலம் உருளைக்கிழங்குகள், கத்திரிக்காய் மற்றும் காலிபிளவர் வியாபாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon