மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

பால்வெளிக்கு வெளியே மர்ம கதிர் வெடிப்புகள்!

பால்வெளிக்கு வெளியே மர்ம கதிர் வெடிப்புகள்!

பால்வெளிக்கு வெளியில் மிகப்பிரகாசமான மர்ம ரேடியோ கதிர் வெடிப்புகள் ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பால்வெளிக்கு வெளியில் தொடர்ந்து வேகமான ரேடியோ கதிர்கள் வெடித்து வருவதை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது வரலாற்றில் இரண்டாவது முறையாக நிகழ்வதாகும். இதேபோல 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும் ஆய்வாளர்கள் குழு ஒன்று இதேபோன்ற ரேடியோ கதிர் வெடிப்புகளை கண்டறிந்தது. கடந்த 9ஆம் தேதியன்று நேச்சர் பத்திரிகையில் வெளியான ஆய்வறிக்கையில், பால்வெளிக்கு அப்பால் 12க்கும் மேற்பட்ட ரேடியோ கதிர் வெடிப்புகளை ஆய்வாளர்கள் இரண்டாவது முறையாகக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில வெடிப்புகள் ஒரே இடத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கனடா நாட்டின் ‘கைம்’ என்ற தொலைநோக்கியைப் பயன்படுத்தி இந்த ரேடியோ கதிர் வெடிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜூலை முதல் ஆகஸ்ட் வரை பதிமூன்று ரேடியோ கதிர் வெடிப்புகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவை 1.5 பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் ஒரே இடத்தில் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. எனினும், இந்த வெடிப்புகள் எப்படி உருவாகின்றன என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்த ரேடியோ கதிர் வெடிப்புகள் ஒரு நொடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரம் மட்டுமே ஏற்படும். இந்த கதிர் வெடிப்புகள் மனித இனம் இதுவரை கண்டிராத அளவுக்குப் பிரகாசமானதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon