மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

பாலாஜி - நித்யா: தள்ளுபடியான விவாகரத்து வழக்கு!

பாலாஜி - நித்யா: தள்ளுபடியான விவாகரத்து வழக்கு!

நகைச்சுவை நடிகர் பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு நிலவிவந்தது. 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் நித்யா, பாலாஜி தன்னை சித்திரவதை செய்வதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அவர் மீது பெண் வன்கொடுமை சட்டம், ஆபாசமாகத் திட்டுதல், தகாத வார்த்தைகளால் தரக்குறைவாகப் பேசுதல், கொலை மிரட்டல், ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தாக்கியது என நான்கு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.

இருவரும் பிரிந்து வாழ்ந்த நிலையில் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளைக் கூறிவந்தனர். இந்த நிலையில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தனர். இவர்களுக்கு போஷிகா என்ற ஏழு வயது பெண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பாலாஜி, நித்யா இருவரும் இணைந்து கலந்துகொண்டனர். கணவன் மனைவியாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்த நிலையில் பிக் பாஸ் மூலம் ஒரே வீட்டில் 100 நாட்கள் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது இருவருக்குள்ளும் சில புரிதல் ஏற்பட்டது.

பாலாஜி தனது தவற்றுக்காக மன்னிப்பு கோரினார். ஆனால், ஏற்கெனவே பலமுறை மன்னிப்பு கேட்டும் அவர் திருந்தவில்லை என்று நித்யா அதை ஏற்கவில்லை. பின் குழந்தைக்காக அவருடன் இணைய சம்மதம் தெரிவித்தார்.

இந்த நிலையில் அவர்களது விவாகரத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் தரப்பிடம் நாம் விசாரித்தபோது, “விவாகரத்து தொடர்பாக அவர்கள் இருவரும் அதன்பின் நீதிமன்றத்தை நாடவில்லை. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர்களது அறிவிப்பை அடிப்படையாகக்கொண்டு அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து வாழ்வது குறித்து தெரியாது” என்று கூறினர்.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon