மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

போதையாக மாறிய ஃபேஸ்புக், வாட்ஸ் அப்

 போதையாக மாறிய ஃபேஸ்புக், வாட்ஸ் அப்

விளம்பரம்

போதையில்லாத வாழ்வென்பது இப்போது எட்டாவது அதிசயமாகவே பார்க்கப்படுகிறது. ஆண், பெண் என்று எந்த பேதமும் இல்லாமல், ஏதாவது ஒரு போதையில் சிக்கிக்கொள்வது இன்றைய வேகயுகத்தில் வாடிக்கையாகிவிட்டது. அதிலிருந்து விடுபடும் எண்ணம் உண்டாகும்போதே, போதைக்கு அடிமையாவது எவ்வளவு பெரிய துன்பம் என்பது பிடிபடுகிறது.

மது, போதை மருந்து, பேஸ்புக் – வாட்ஸ்அப் மோகம், காரணமற்ற வெறுமை, தற்கொலை சிந்தனை, அதிகளவில் பயம் அல்லது கோபம் அல்லது சந்தேகம் போன்றவற்றால் அவதிப்படுவது என்று நம்மையும் அறியாமல் பலவாறு துன்பப்படுகிறோம். குறிப்பாக, பேஸ்புக் அல்லது வாட்ஸப்பில் மூழ்கியிருக்கும் இன்றைய தலைமுறைக்கு, அதுவும் ஒருவகை போதை என்று உணரவே நெடுநாளாகிறது. நேர விரயத்தை உண்டாக்குவதோடு, நமது மனநலத்தையும் இது புரட்டிப்போடுகிறது.

எல்லா இடத்திலும் குனிந்த தலை நிமிராத இளையதலைமுறையை பார்ப்பது அதிசயமாகிவிட்டது. அந்த அளவுக்கு வாட்ஸ்அப் பேஸ்புக்கும் நம் தலையைத் தாழ்த்திவிட்டது. இதனால் முதலில் நமது தூக்கம் பறிபோய், அதன்பின் உடல்நலம் கெட்டு, முடிவில் மனநலம் கேள்விக்குறியாகிறது. கண்களுக்குக் கீழே கருவளையம் இல்லாதவர்களைப் பார்ப்பது இப்போது அரிதாகிவிட்டது. அந்த அளவுக்கு பேஸ்புக் – வாட்ஸ்அப் மோகம் நமது இயல்பை மாற்றி, மனநோயாளிகளாகத் திரிவதை நாகரிகம் என்றாக்கியிருக்கிறது.

இதிலிருந்து விடுபடுவதற்கான யோசனை, இன்று பலரிடம் ஏற்பட்டிருக்கிறது. டிஜிட்டல் யுகத்தில் எந்தவித ஆப்ஸ்களும் இல்லாத செல்போன்களைத் தேடும் அளவிற்கு, இது பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மலிவுவிலையில் கிடைக்கும் தொழில்நுட்பம் வளர்ச்சியை மட்டுமல்ல, சில விபரீதங்களையும் நம்முள் விதைக்கிறது. இதிலிருந்து எளிதாக விடுபடுவதற்கான மனநல ஆலோசனைகளைத் தருகிறது மைண்ட் ஸோன் மருத்துவ மையம். தேவைப்படும் நோயாளிகளுக்கு மனநல சிகிச்சை மற்றும் மருந்துகளும் இங்கு வழங்கப்படுகின்றன.

மது மற்றும் போதைப்பொருளில் இருந்து மீள்வது,வன்முறை மற்றும் தற்கொலை போன்ற நடத்தைக் கோளாறுகளைச் சரிசெய்வது போன்ற சிகிச்சைகளை அளித்துவருகிறது மைண்ட் ஸோன் மனநல மருத்துவமனை. நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வகையில், 70 படுக்கை வசதிகள் கொண்டது மைண்ட் ஸோன்.

உளவியல், மனநல மருத்துவம் மற்றும் சமூகச்சேவைகளுக்கான சிறப்பு மையமாகச் செயல்பட்டு வருகிறது மைண்ட் ஸோன். இதனை மருத்துவ உளவியல் நிபுணர் சுனில்குமார் மற்றும் உளவியல் நிபுணர் ஜெயசுதா காமராஜ் நிர்வகித்து வருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு:

மைண்ட் ஸோன்
நம்பர் 58/2, முதல் அவென்யூ,
சாஸ்திரி நகர், அடையார்,
சென்னை – 600020
இமெயில்: [email protected]
அலைபேசி: 044-24460101, 9444297058, 9176055660

விளம்பர பகுதி

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon