மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 4 ஜுன் 2020

முத்ரா திட்டத்தில் பயன்பெறும் பெண்கள்!

முத்ரா திட்டத்தில் பயன்பெறும் பெண்கள்!

மத்திய அரசின் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் பெண் தொழில்முனைவோர்கள்தான் அதிகமாகப் பயன்பெறுவதாக ஜவுளித் துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில் மேம்பாட்டுக்காக வங்கிகள் வாயிலாக மூன்று பிரிவுகளில் கடனுதவி வழங்கப்படுகிறது. சிசு என்ற பெயரில் ரூ.50,000 வரையிலும், கிஷோர் என்ற பெயரில் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரையிலும் மற்றும் தருண் என்ற பெயரில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள மொத்த கடனுதவியில் 75 சதவிகிதம் அளவுக்குக் கடன்கள் பெண் தொழில்முனைவோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய ஜவுளித் துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஜனவரி 9ஆம் தேதி ரைசினா டயலாக் 2019 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்மிருதி இரானி பேசுகையில், “முத்ரா திட்டத்தின் கீழ் பெண் தொழில்முனைவோர்கள்தான் அதிகமாகப் பயன்பெற்றுள்ளனர். ஜவுளித் துறையிலும்கூட 70 முதல் 75 சதவிகிதம் அளவு வேலையாட்கள் பெண்களாகவே இருக்கின்றனர். தொழில் துறையில் பெண்கள் தொடர்ந்து இயங்க வேண்டுமானால் அவர்களின் திறன் மேம்பாடு மற்றும் இருப்பிட வசதி அவசியமாகும். ஜவுளித் துறையானது பெண் கல்வி மற்றும் அவர்களின் திறன் மேம்பாட்டின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon