மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

அசோக் லேலண்ட்: அதிகரிக்கும் ஆர்டர்கள்!

அசோக் லேலண்ட்: அதிகரிக்கும் ஆர்டர்கள்!

பல்வேறு மாநிலப் போக்குவரத்துக் கழகங்களிடமிருந்து 2,580 பேருந்துகளுக்கான ஆர்டர்கள் அசோக் லேலண்ட் நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது.

ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு கனரக வாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. பேருந்து தயாரிப்பில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாகத் திகழும் அசோக் லேலண்ட், சர்வதேச அளவில் இப்பிரிவில் நான்காம் இடம் வகிக்கிறது. இந்நிறுவனத்துக்குச் சென்னை சாலைப் போக்குவரத்துக் கழகம், உத்தரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்து நிறுவனம் மற்றும் சண்டிகர் போக்குவரத்துக் கழகத்திடமிருந்து மொத்தம் 2,580 பேருந்துகளைத் தயாரித்து வழங்குவதற்கான ஆர்டர் கிடைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான வினோத் கே.தசாரி, மணி கண்ட்ரோல் ஊடகத்திடம் பேசுகையில், “அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் போக்குவரத்து அமைப்புகளிடமிருந்து இந்த ஆர்டர்கள் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களது உயர்தர தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளால் தொடர்ந்து இந்தியாவில் பேருந்துகளுக்கான பிரிவில் ஆதிக்கம் செலுத்துவோம்” என்று தெரிவித்தார். அசோக் லேலண்ட் நிறுவனம், ஆஷ்லே ஏவியேசன் நிறுவனத்தின் பங்குகளை ரூ.25,50,051க்கு கைப்பற்றியுள்ளதாகவும், இதன் மூலம் அந்நிறுவனத்தில் அசோக் லேலண்டின் பங்கு அளவு 88.75 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகவும் வினோத் கே.தசாரி கூறினார்.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon