மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

இந்திய சீரியல்களுக்கு பாகிஸ்தான் தொலைக்காட்சியில் தடை!

இந்திய சீரியல்களுக்கு பாகிஸ்தான் தொலைக்காட்சியில் தடை!

இந்தியத் திரைப்படங்கள்,சீரியல்களை பாகிஸ்தான் சேனல்களில் ஒளிபரப்புவதால் அந்நாட்டுக் கலாச்சாரம் பாதிக்கப்படுவதாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹிப் நிஸார் நேற்று (ஜனவரி 9) தெரிவித்துள்ளார்.

இந்தியத் திரைப்படங்கள், சீரியல்களை பாகிஸ்தானில் ஒளிபரப்ப அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அக்டோபர் மாதம் தடைவிதித்திருந்தது. இதை எதிர்த்து பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் (PEMRA) மனு தாக்கல் செய்திருந்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹிப் நிஸார் தலைமையில் மூன்று பேர் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்கிறது. இந்த விசாரணையின் போது நேற்று இந்தியப் படங்களால் பாகிஸ்தான் நாட்டுக் கலாச்சாரம் பாதிக்கப்படுவதாகத் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

பெம்ரா அமைப்பின் தலைவர் சலீம் பைக், “பாகிஸ்தானில் ஒளிபரப்பாகி வரும் ஃபிலிமாசியா சேனலின் 65 சதவிகித நிகழ்ச்சிகள் அந்நிய மொழிகளிலிருந்து சப்ஸ்கிரைப் செய்யப்படக்கூடியவையே. இந்த சதவிகிதமானது படிப்படியாக உயர்ந்து தற்போது 80 சதவிகிதம் என்ற நிலையை வந்தடைந்திருக்கிறது. பாகிஸ்தானில் இப்படி இந்திய சேனல்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறப்பதை எப்படி அங்கீகரிப்பது என்பதால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இவ்விதமாக எச்சரித்துள்ளார். ஆயினும் இந்தத் தடையை எதிர்த்து நாங்கள் மேல் முறையீடு செய்வது உறுதி” என்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon