மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

பெனிசிலின் ஆலைகளை மூடும் பிஃபிசர்!

பெனிசிலின் ஆலைகளை மூடும் பிஃபிசர்!

தமிழ்நாட்டிலும், மகாராஷ்டிராவிலும் பெனிசிலின் உள்ளிட்ட மருந்துகளைத் தயாரித்து வரும் அமெரிக்க மருந்துப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான பிஃபிசர் தனது உற்பத்தியை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிஃபிசர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நீண்ட காலமாகவே பெனிசிலின் மருந்துகளுக்கான தேவை குறைந்து வருகிறது. இதனால் நிறுவனம் பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்து வருகிறது. இந்த நிலை தொடர்வது நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பெரும் தடையாக உள்ளது. பெனிசிலின் மருந்துகள் தயாரிக்கும் ஆலைகள் எங்களுக்கு இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் உள்ளன. இந்த 2 ஆலைகளையும் தற்போது மூட முடிவெடுத்துள்ளோம். இந்த 2 ஆலைகளிலும் இந்தியச் சந்தைக்கான மருந்துப் பொருட்கள் தயாரிக்கப்படுவதில்லை’ என்று தெரிவித்துள்ளது.

சென்னைக்கு அருகேயுள்ள இருங்காட்டுக்கோட்டை ஆலையில் சுமார் 1,000 பேரும், மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் உள்ள ஆலையில் சுமார் 700 பேரும் பணியாற்றி வருகின்றனர். தற்போது ஆலை மூடப்படுவதாக நிர்வாகம் முடிவெடுத்துள்ளதால் இவர்கள் அனைவரும் தங்களது வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் இது வெறும் 6 விழுக்காடு மட்டும்தான். அதே சமயத்தில் கோவா, விசாகப்பட்டினம் மற்றும் அகமதாபாத்தில் உள்ள ஆலைகள் வழக்கம்போல இயங்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon