மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

முகம் பார்த்தே நோய் கண்டறியும் தொழில்நுட்பம்!

முகம் பார்த்தே நோய் கண்டறியும் தொழில்நுட்பம்!

முகத்தை பார்த்தே மரபணு நோய்களை கண்டறியும் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

டீப்கெஸ்டால்ட் என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அமெரிக்க நிறுவனமான எஃப்.டி.என்.ஏ உருவாக்கியுள்ளது. நோயாளிகளின் புகைப்படத்தை பார்த்தே அவர்களுக்கு இருக்கும் அரிய மரபணு நோய்களை கண்டறிந்து மருத்துவர்களை விட வேகமாக செயல்படுகிறது இந்த தொழில்நுட்பம். பல உடல்நலக் கோளாறுகளுக்கும், முகக் குறியீடுகளுக்கும் தொடர்புண்டு. எடுத்துக்காட்டாக, அகண்ட வாயும், இடைவெளியுடனான பற்களும் ஏஞ்சல்மேன் நோயின் குறியீடுகளாகும். அதேபோல, டவுன் சிண்ட்ரோம் நோயின் குறியீடாக பாதாம் பருப்பு வடிவில் கண்கள் இருக்கும். இதுபோன்ற குறியீடுகள் வாயிலாக முகத்தை வைத்து தானாகவே நோய்களை கண்டறிய இத்தொழில்நுட்பம் வழிவகை செய்கிறது.

200க்கும் மேற்பட்ட மரபணு கோளாறுகள் கொண்ட நோயாளிகளின் 17,000க்கும் மேற்பட்ட புகைப்படங்களை பயன்படுத்தி இந்த செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. மற்றொரு சோதனையில் 502 புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த சோதனையில் மருத்துவ நிபுணர்களை விட செயற்கை நுண்ணறிவு மென்பொருள் சிறப்பாக நோய்களை கண்டறிந்துள்ளது. நூனான் சிண்ட்ரோம் நோயைக் கண்டறியும் மற்றொரு சோதனையில் மருத்துவ வல்லுநர்களின் வெற்றி விகிதம் 20 விழுக்காடாகவும், மென்பொருளின் வெற்றி விகிதம் 64 விழுக்காடாகவும் இருந்துள்ளது. எனினும், இத்தொழில்நுட்பத்தால் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon