மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

பஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: இதோ இருக்கிறது ஆஸ்திரேலியா!

 பஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: இதோ இருக்கிறது ஆஸ்திரேலியா!

விளம்பரம்

உலகில் அதிவேகப் பயணம் என்றால் அது விமானப் பயணம் என்பதில் சந்தேகம் இருக்காது. தற்போது சோதனையில் இருக்கும் Hyperloop திட்டம்கூட 760 மைல் வேகத்தில் இயங்கக்கூடியதுதான். ஆனால் ஒரு பயணிகள் விமானம் 770 மைல் வேகத்தில் செல்லக்கூடியது. இருந்தாலும், விமானத்தில் செல்வதற்கு பல மணி நேரம் காத்திருந்தும், செல்லவேண்டிய நாட்டுக்கு இடையிலிருக்கும் நாடுகளிலெல்லாம் நின்றும் பயணிக்கவேண்டிய காரணத்தால் விமானப் பயணிகள் எதிர்கொள்ளும் குறைகள் ஏராளமாக இருந்தன. அப்படியொரு அனுபவத்தைத் தனது பயணிகளுக்குக் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் உருவாகியதுதான் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் கொலம்போ முதல் மெல்போர்ன் வரையிலான 10 மணிநேர ‘நான் ஸ்டாப்’ விமான சேவை.

39 வருடங்களாக விமான சேவையில் ஈடுபட்டுவரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், 2017ஆம் வருடத்தின் அக்டோபர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் நகரத்துக்கு நான் ஸ்டாப் விமான சேவையை இயக்கிவருகிறது. வேறெந்த நாட்டுக்கும் செல்லாமல், இந்த வழித்தடத்தில் விமான சேவையை இயக்குவதற்குக் காரணம் இருக்கிறது.

உணவு, கலை, கிரிக்கெட், சர்ஃபிங் மற்றும் காடுகளின் அமைப்பு என இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. எனவே, ஆஸ்திரேலியாவிலிருந்து சுற்றுலாவுக்காக வரும் பயணிகள் தங்களது நாட்டில் இருப்பது போலவே உணர்வதற்கான சூழல் அதிகம் என்பதால் இந்த வழித்தடத்தை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் நான் ஸ்டாப் முறைக்கு மாற்றிய முயற்சி உடனடி வெற்றியைக் கண்டது.

இப்படி ஒரே மாதிரியாக இருக்கும் இரு நாடுகளின் கலை, உணவு, பழக்கவழக்கம், விளையாட்டு, நிலப்பரப்பு ஆகியவற்றை ‘Two cities. One spirit’ என்ற பெயரில் விளம்பரப்படமாக எடுத்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் படைப்புக்கு 'Campaign' பிரிவின் கீழ் Golden City Gate Awards 2018 நிகழ்வில் விருது வழங்கப்பட்டது. Golden City Gate விருதுகள் நிகழ்வு ஒவ்வொரு வருடமும் ஜெர்மனியிலுள்ள திரைப்படம் மற்றும் டெலிவிஷன் தயாரிப்பாளர்களின் மத்தியக் கூட்டமைப்பான FEDERAL ASSOCIATION OF GERMAN FILM AND AV PRODUCERS சார்பில் வழங்கப்பட்டுவருகிறது.

இரட்டையர் போல குணங்களைக் கொண்ட இரு நாடுகளின் சகோதரத்துவத்தைப் போற்றும் வகையிலும், மேலும் பல பயணிகளைப் பயணப்படவைத்து சுற்றுலாவின் சிறப்புகளை எடுத்துணர்த்தும் வகையிலும் உருவாக்கப்பட்டிருந்த “Two cities. One spirit” விளம்பரப்படத்துக்கு இந்த விருது கிடைத்தது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. அஜித் தியாஸ் பேசியபோது “ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நாங்கள் Golden City Gate நிகழ்வில் மூன்று விருதுகளைப் பெற்றிருப்பதில் பூரிப்படைகிறோம். இங்கு விருது வென்றதன் மூலம், எங்களது சந்தைப்படுத்தும் முயற்சிகள் உலகம் முழுவதிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கருதுகிறோம்” என்று கூறி தன் நிறுவனத்தின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

திரு. அஜித் தியாஸ் கூறிய மூன்றாவது விருது என்ன என்பதை இந்தப் பகுதியில் தொடர்ந்து பார்க்கலாம்.

விளம்பர பகுதி

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon