மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

பம்பை வரை தமிழகப் பேருந்துகளுக்கு அனுமதி!

பம்பை வரை தமிழகப் பேருந்துகளுக்கு அனுமதி!

தமிழக அரசுப் பேருந்துகளை பம்பை வரை இயக்க கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கேரளாவில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பெய்த பெருமழையால், சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சேதமடைந்த பாலங்களைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்ததால், வாகன நெருக்கடி உண்டானது. இதனைத் தவிர்க்க, பக்தர்களின் தனியார் வாகனங்கள் நிலக்கல் வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். இதன் எதிரொலியாக, கேரளாவில் பல்வேறு போராட்டங்களும் வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றன. இதனால், அரசு, தனியார் பேருந்துகள், பக்தர்களின் வாகனங்கள் என்று அனைத்தும் நிலக்கல் வரை மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அது போன்று, பம்பை செல்ல கேரள அரசுப் பேருந்துகள் மற்றும் விஐபி வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தமிழக அரசுப் பேருந்துகள் நிலக்கல் வரை மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று (ஜனவரி 9) நடந்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசுப் பேருந்துகளை பம்பை வரை இயக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது கேரள உயர் நீதிமன்றம்.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon