மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

செம்பு இல்லாம பஞ்சாயத்தா: அப்டேட் குமாரு

செம்பு இல்லாம பஞ்சாயத்தா: அப்டேட் குமாரு

ஒரு வழியா ஆளுங்கட்சி, எதிர் கட்சி எல்லாம் சேர்ந்து இடைத்தேர்தல் பஞ்சாயத்தை கலைச்சிட்டாங்க. கண்ணாத்தா படத்துல ‘சூனா பானா’ வடிவேலு பஞ்சாயத்தை கலைக்குற சீனுக்கு ஸ்டாலின் படத்தை போட்டு ஒரு மீம் போடனும்னு நினைச்சுகிட்டே படுத்து தூங்குனேன். காலையில நியூஸை பார்த்தா கிராம சபை கூட்டத்துல அவரே பஞ்சாயத்து தலைவர் மாதிரி ஜமுக்காளம் விரிச்சு ஜம்முன்னு உட்கார்ந்துருக்கார். பக்கத்துல செம்பு எதுவும் வச்சுருக்காங்களான்னு போட்டோவை ஸூம் பண்ணி பார்த்தேன். வாட்டர் கேன் ஒண்ணு மட்டும் தான் இருந்துச்சு. பிளாஸ்டிக்கை எதிர்கட்சி தலைவர் வித்தியாசமா ஒழிக்கிறாரேன்னு நினைச்சுகிட்டேன். ஆங்... இப்ப தான் வசமா ஒரு மேட்டரு சிக்கிருக்கு..

“எத்தனை ஊர் பஞ்சாயத்தை டா முடிச்சு வைக்குறது.... அண்ணன் இதை சொல்லியே ஓட்டு கேட்டு சி.எம்.ஆகிடுவேன்ல”ன்னு ஓரு சீன் வருமே அதுக்கு இந்த போட்டோவை வச்சு ஒரு மீம் போட்டுட்டு வாரேன். நீங்க அப்டேட்டை பாருங்க.

@amuduarattai

புதிய ஆலைகள் வந்தால் தான் பொருளாதாரம் முன்னேறும். -முதல்வர் பழனிச்சாமி.

உங்கள் பொருளாதாரம் தானே.!?

@Thaadikkaran

அம்மாவின் விரல்களே குழந்தைக்கு வாக்கிங் ஸ்டிக்..!

@kumarfaculty

பொருட்களை காகிதத்தில் மடித்து கொடுத்த போது இருந்த வாசிப்புப் பழக்கத்தை பாலிதீன் பைகள் அழித்தொழித்து விட்டன...!!!

@sultan_Twitz

சென்னை மாநகர காவல்துறையில் ரோபோவை பயன்படுத்துவது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை - செய்தி #

ரோபோவை லஞ்சம் வாங்காத மாதிரி ப்ரோக்ராம் பண்ணி வைங்க ஆபிசர்..?

@Thaadikkaran

வீட்டுக்கு தெரியாம வெளிய எங்கயாவது வந்திருக்கும்போது, வீட்ல இருந்து வரும் ஒவ்வொரு போன் காலும் ஒரு 'திகில்படமே'

@Annaiinpillai

மோடி ஆட்சியில் தனி நபர் வருமான‌ம் 45% அதிகரிப்பு - செய்தி # எப்ப பாரு மனுஷனுக்கு அம்பானி நியாபகம் தான் !

@manipmp

ஒரு வேலையை எவ்வளவு சிறப்பாக செய்தாலும்,அடுத்த முறை அந்த வேலையை அதைவிட சிறப்பாக செய்வது

"சோறு சாப்பிடும் போதுதான்"!

@rahimgazali

ரேஷன் கடையில் எல்லா கார்டுக்கும் 1000 கிடையாது என்ற கோர்ட் உத்தரவுக்கு பின்தான் கூட்டம் அதிகமாக இருக்கிறது. கேட்டால் 'இன்னைக்கு கூட்டமா இருக்கும். நாளைக்கு வருவோம்ன்னுதான் வீட்ல இருந்தோம். ஆனா, நாளைக்கு கொடுப்பாங்களோ, மாட்டாங்களோ? அதுதான் இன்னைக்கே வந்திட்டோம்'ன்னு சொல்றாங்க

@Jeytwits

பிடித்த பாடல் என டிவியின் சத்தத்தை சற்று கூட்டும் போது சட்டென கரண்ட் கட்டாவதெல்லாம் என்ன மாதிரியான டிஸைனோ..??

@smhrkalifa

இந்த சட்டை உங்களுக்கு நல்லாயிருக்கும் போடுங்கன்னு சொன்னால் அது மனைவி,

என் பிள்ளைக்கு எந்த சட்டை போட்டாலும் நல்லாயிருக்கும்னு சொன்னால் அது அம்மா.

@kuralvanji

அப்பாக்களின் காலர் அழுக்குகள் அவரது கடின உழைப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆஸ்கார் விருதுகள்

@Annaiinpillai

சென்னை மாநகர காவல்துறையில் ரோபோவை பயன்படுத்துவது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை - செய்தி

அதுவாவது திருடன பிடிக்குமா சாரே?!

@gips_twitz

மக்கள் : அண்ணே பார்லிமென்ட் எங்க இருக்கு ?

அன்புமணி : அது தர்மபுரி பக்கம் திண்டிவனம் பக்கம் இருக்கு தம்பி

@Thaadikkaran

பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என கூற தம்பிதுரைக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளதா? - பொன்.ராதாகிருஷ்ணன்

அது அவரோட சொந்த கருத்துண்ணே..!!

@Annaiinpillai

“தமிழக மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வராது!”- ஹெச்.ராஜா#

"கேட்காத காதுக்கு ஹெட் செட்டு சாப்புடாத வாயிக்கு பல் செட்டு மொமென்ட் !"

@shivaas_twitz

ஐ.பி.எல் போட்டிகள் மார்ச் 23ஆம் தேதி தொடங்குகிறது - செய்தி

-அப்பாடா... தேர்தலை தள்ளி வைக்க புது காரணம் கிடைச்சிடுச்சு..!

@Annaiinpillai

படத்துக்கு கியூல நின்னு டிக்கெட் கிடைக்காத சோகத்தில் வீடு திரும்பிய மனிதனுக்கு ஆறுதல் பரிசு கொடுத்தன ரேஷன்கடைகள்!

ஒருநிமிடகதை

@drkvm

" நெகிழி " க்கு காட்டும் வேகத்தை ஸ்டெர்லைட்டுக்கும் காட்டலாமே....

@Vicky_stirring

நான் இதுவரை 11ஆயிரம் கோப்புகளில் கையெழுத்து போட்டுள்ளேன் - எடப்பாடி பழனிசாமி.

அப்படியே ராஜினாமா கோப்புல ஒன்னு போட்டு விட்டுருக்க வேண்டியதுதான தெய்வமே?!--மக்கள்

-லாக் ஆஃப்

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon