மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

சர்வதேச வளர்ச்சியில் பின்னடைவு!

சர்வதேச வளர்ச்சியில் பின்னடைவு!

சர்வதேசப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை உலக வங்கி குறைத்துக்கொண்டுள்ளது.

டார்கெனிங் ஸ்கைஸ் என்ற தலைப்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், 2019ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 2.9 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்று தனது வளர்ச்சி மதிப்பீட்டைக் குறைத்துள்ளது. முன்னதாக சென்ற ஆண்டின் ஜூன் மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையில் உலகப் பொருளாதார வளர்ச்சி 3 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்திருந்தது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் 3.1 சதவிகிதமும், 2018ஆம் ஆண்டில் 3 சதவிகிதமும் உலகப் பொருளாதாரம் வளர்ச்சி கண்டிருந்தது.

உலக நாடுகளில் அமெரிக்காவின் வளர்ச்சி மதிப்பீட்டைக் குறைக்காமல் 2.5 சதவிகிதத்திலேயே உலக வங்கி நிர்ணயித்துள்ளது. 2018ஆம் ஆண்டில் அமெரிக்கா 2.9 சதவிகிதம் வளர்ச்சி கண்டிருந்தது. உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரமான சீனா 6.2 சதவிகித வளர்ச்சியை மட்டுமே கொண்டிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டில் இதன் வளர்ச்சி 6.5 சதவிகிதமாக இருந்தது. ஜப்பான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 0.8 சதவிகிதத்திலிருந்து 0.9 சதவிகிதமாக உலக வங்கி உயர்த்தியுள்ளது.

இந்தியாவின் மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவிகிதமாக இருக்கும் என்று மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon