மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

தைவானில் 'இந்தியன் 2' டீம்!

தைவானில் 'இந்தியன் 2' டீம்!

கமல் நடிப்பில் உருவாகவுள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்தியன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் கமல்ஹாசன் இறந்து விட்டதாக அனைவரும் நினைக்கியில் அவர் தப்பித்து வெளிநாட்டில் இருந்து தொலைபேசியில் காவல்துறையினரிடமே பேசுவார். “லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் பயம் வரவேண்டும் நான் உயிருடன் இருப்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். தப்பு நடக்கும் இடத்திற்கு நான் கட்டாயம் வருவேன்” என்பதாக கமல்ஹாசன் வசனம் பேசுவார். இந்தப் புள்ளியிலிருந்து இந்தியன் 2 படத்தின் திரைக்கதை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் படத்தை பொறுத்தவரை பெரும்பாலும் சென்னை மற்றும் கிராமப்புறப் பின்னணியில் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும். பாடல் காட்சிகள் மற்றும் கிளைமேக்ஸ் காட்சி வெளிநாட்டில் படமாக்கப்பட்டிருக்கும்.

ஆனால் இந்தியன் 2 படத்தின் பெரும்பாலான காட்சிகள் தைவானில் படமாக்கப்படவுள்ளன. இதனால் இயக்குநர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் தைவானில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் புகைப்படங்களை ரவிவர்மன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

முதல் பாகத்தில் மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, சுகன்யா என மூன்று நாயகிகள் நடித்த நிலையில் இந்தப் பாகத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருந்தார். தற்போது தென் கொரிய நடிகை பே சுஸி இணைந்துள்ளார். இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. நெடுமுடி வேணு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18ஆம் தேதி பொள்ளாச்சியில் தொடங்கவுள்ளது.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon