மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

பயணிகள் வாகன விற்பனை சரிவு!

பயணிகள் வாகன விற்பனை சரிவு!

ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் இந்தியாவில் பயணிகள் வாகன விற்பனை 2 சதவிகிதம் சரிவைச் சந்தித்துள்ளது.

ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பின் தரவுகளின்படி, 2018 ஏப்ரல் - டிசம்பரில் மொத்தம் 19,17,750 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2017ஆம் ஆண்டின் விற்பனையை விட 2 சதவிகிதம் குறைவாகும். 2017ஆம் ஆண்டில் பயணிகள் வாகன விற்பனை எண்ணிக்கை 19,65,630 ஆக இருந்தது. இந்தியாவிலுள்ள 1,431 பிராந்திய போக்குவரத்து அலுவலகங்களிடமிருந்து கிடைத்த விவரங்களைக் கொண்டு இந்தத் தகவல்களை ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. ஜனவரி - மார்ச் காலாண்டில் வாகன விற்பனை மீண்டும் உயரும் என்று இந்த அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதத்தில் பயணிகள் வாகன விற்பனையில் 5 சதவிகிதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2017 டிசம்பரில் 10,29,311 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்த நிலையில், 2018 டிசம்பரில் அந்த எண்ணிக்கை 11,41,209 ஆக உயர்ந்துள்ளது. இருசக்கர வாகன விற்பனையைப் பொறுத்தவரையில், 2017 ஏப்ரல் - டிசம்பரில் 1,05,37,542லிருந்து 2018 ஏப்ரல் - டிசம்பரில் 1,10,71,352 ஆக உயர்ந்துள்ளது. 2018 டிசம்பர் மாதத்தில் மட்டும் 11 சதவிகித உயர்வுடன் மொத்தம் 11,41,209 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இருசக்கர வாகன விற்பனையும் ஜனவரி - மார்ச் மாதங்களில் சிறப்பாக இருக்கும் என்று ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பின் தலைவரான ஆஷிஸ் காலே, டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon