மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

சுவிஸ் வங்கி: குறையும் இந்தியப் பணம்!

சுவிஸ் வங்கி: குறையும் இந்தியப் பணம்!

சுவிஸ் வங்கிகளில் கடன் பெறும் மற்றும் டெபாசிட் செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை 2017ஆம் ஆண்டில் 34.5 விழுக்காடு சரிந்துள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒன்றிய நிதித் துறை இணையமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா மக்களவையில் நேற்று (ஜனவரி 8) அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில், “சுவிட்சர்லாந்து நாட்டில் வங்கிக் கடன் மற்றும் டெபாசிட் செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை 2017ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டைக் காட்டிலும் சரிந்துள்ளது. 2013 முதல் 2017 வரையிலான காலத்தில் 80.3 விழுக்காடு சரிந்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் புழங்கும் கருப்புப் பணத்தைக் கண்காணிக்கும் விதமாக அந்நாட்டு அரசுடன் இந்தியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சுவிட்சர்லாந்து அரசு நமக்குத் தகவல்களை அளிக்கவுள்ளது. 2018ஆம் ஆண்டு முதல் அடுத்து வரும் ஆண்டுகளுக்கான, சுவிட்சர்லாந்தில் பதிவாகியுள்ள இந்தியர்களின் நிதிக் கணக்குகள் சார்ந்த விவரங்களை இதன்மூலம் நம்மால் பெற இயலும். இது கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைக்கு உதவும். அந்நாட்டு வங்கிகளில் கடன் பெறும் மற்றும் டெபாசிட் செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை 2017ஆம் ஆண்டில் மட்டும் 34.5 விழுக்காடு சரிந்துள்ளது” என்றார்.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon