மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

மொபைல் பரிவர்த்தனையில் பின்னடைவு!

மொபைல் பரிவர்த்தனையில் பின்னடைவு!

நவம்பர் மாதத்தில் மொபைல் வாலெட் பரிவர்த்தனைகள் கடும் சரிவைச் சந்தித்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மொபைல் வாலெட் பரிவர்த்தனைகள் தொடர்பான விவரங்களை மத்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 7ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அதன்படி, நவம்பர் மாதத்தில் சுமார் 347.32 மில்லியன் மொபைல் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இவற்றின் பரிவர்த்தனை மதிப்பு ரூ.16,108 கோடியாகும். இதற்கு முந்தைய அக்டோபர் மாதத்தில் 368.45 மில்லியன் பரிவர்த்தனைகள் ரூ.18,786 கோடி மதிப்பில் நடந்திருந்தன. அதாவது, மொபைல் பரிவர்த்தனைகள் எண்ணிக்கை அடிப்படையில் 5.7 சதவிகிதமும், மதிப்பு அடிப்படையில் 14 சதவிகிதமும் சரிவைச் சந்தித்துள்ளன.

மொபைல் வாலெட் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் ஆதார் சார்ந்த பதிவைக் கட்டாயமாக்கியதால்தான் மொபைல் பரிவர்த்தனைகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளும் நவம்பர் மாதத்தில் சரிவைச் சந்தித்துள்ளன. அக்டோபர் மாதத்தில் 1,424.97 மில்லியன் கார்டு பரிவர்த்தனைகள் நடந்திருந்த நிலையில், நவம்பர் மாதத்தில் அதன் எண்ணிக்கை 1,362.14 ஆகக் குறைந்துள்ளது. இது 4 சதவிகிதம் வீழ்ச்சியாகும். கார்டு பரிவர்த்தனைகளின் மதிப்பும் ரூ.4.40 லட்சம் கோடியிலிருந்து ரூ.3.84 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. ஆர்.டி.ஜி.எஸ். பரிவர்த்தனையிலும் 10.97 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon