மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

மீண்டும் பணிக்குத் திரும்பினார் அலோக் வர்மா

மீண்டும் பணிக்குத் திரும்பினார் அலோக் வர்மா

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, இன்று (ஜனவரி 9) மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் பல கோடி ரூபாய் பணத்தை அலோக் வர்மா வாங்கினார் என்று துணை இயக்குநர் ராகேஷ் அஸ்தனா புகார் அளித்திருந்தார். இதே விவகாரத்தில் அலோக் வர்மாவும், அஸ்தனா மீது புகார் கூறியிருந்தார். இந்த விவகாரம் கடைசியில் பிரதமர் மோடி வரைக்கும் சென்றது. இதைத் தொடர்ந்து இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

இதை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், அலோக் வர்மா மீதான மத்திய அரசின் முடிவு செல்லாது என்று உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அலோக் வர்மா 77 நாட்களுக்குப் பிறகு இன்று (ஜனவரி 9) மீண்டும் பணிக்கு திரும்பினார். டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் 10ஆவது மாடியில் செயல்பட்டு வந்த அலோக் வர்மாவின் அலுவலகம் மூடி சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

2017 பிப்ரவரி 1ஆம் தேதி சிபிஐ இயக்குநராகப் பதவி ஏற்ற அலோக் வர்மாவின் பணி காலம் வரும் ஜனவரி 31ஆம் தேதியோடு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon