மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

மதுரை சினிமாவின் மற்றொரு முகம்!

மதுரை சினிமாவின் மற்றொரு முகம்!

தமிழ் சினிமாவில் மதுரையை மையமாகக் கொண்டு உருவாகும் படங்கள் சாதிய பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படங்களாகவும் அல்லது அரிவாள் கலாச்சாரத்தை தூக்கிப் பிடிக்கும் படங்களாகவும் வருகின்றன என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இதை மறுக்கும் விதமாக அப்பகுதி மக்களின் வாழ்வியலைப் பேசும் படங்களும் சமீப காலமாக வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முற்றிலும் மாறாக, நகைச்சுவையான கதையை மதுரைப் பின்னணியில் கூறும் படங்களும் வெளிவந்து வெற்றி பெறுகின்றன.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என இரு ஹிட் படங்களைக் கொடுத்து இந்த பாதையை வெற்றிகரமாகத் தொடங்கிவைத்தவர் இயக்குநர் பொன் ராம். தற்போது இதில் கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘செல்லப்பிள்ளை’ படமும் இணையவுள்ளது. பொன் ராமிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அருண் சந்திரன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

குடும்பத்துடன் ரசித்துப் பார்க்கும் வகையில் ஆக்‌ஷன், காமெடி, சென்டிமெண்ட் கலந்து உருவாகவுள்ள இப்படத்திற்கு இளமையும், அழகும் மிக்க நடிகர் ஒருவரை எதிர்பார்த்த அருண் கௌதம் கார்த்திக்கிடம் திரைக்கதையைக் கூறியுள்ளார். அவருக்குக் கதை பிடித்துப்போக, படத்தின் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.

மதுரையைச் சேர்ந்த அருண், தான் பார்த்து வளர்ந்த மனிதர்களையும், இடங்களையும் தனது திரைக்கதைக்குள் கடத்தியுள்ளார். பிப்ரவரி மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கவுள்ளது.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon